அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 17 மே, 2016

வேர்ட் டிப்ஸ்! இடைக்கோடுகள்: சொற்களை அழிக்க: வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்:

இடைக்கோடுகள்: வேர்ட் டாகுமெண்ட்டில், பலவகையான இடைக்கோடுகள் அமைக்கப்படுகின்றன. சாதாரணமாகப் பார்க்கையில் இவை அனைத்தும் ஒரே மாதிரியாகத் தோற்றம் கொண்டுள்ளன. இவற்றிற்கிடையேயான வேறுபாடு அதன் அகலத்தில் உள்ளது. ஒவ்வொன்றும் ஓர் அளவில் அமைந்து, பொருள் தருவதாய் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.



நாம் மைனஸ் கீயை அழுத்துகையில், மிகக் குறுகலான இடைக்கோடு கிடைக்கிறது. சற்று நீளமான இடைக்கோடு 'என் டேஷ்' (en Dash) என அழைக்கப்படுகிறது. இதற்கு இந்தப் பெயர் வரக் காரணம், இந்த வகை இடைக்கோட்டின் அகலமும், என் (n) எழுத்தின் அகலமும் ஒரே அளவில் உள்ளது. இன்னும் சற்று அகலம் கொண்டது எம் டேஷ் (em Dash). மேலே சொன்னது போல, ஆங்கில எழுத்து 'எம்' அமையும் அகலத்தில் இதுவும் அமைந்துள்ளது. இதுதான், வாக்கியங்களில், இரு வேறு சொற்றொடர்களுக்கிடையே பயன்படுத்தப்படுகிறது.

என் டேஷ் அமைக்க வேண்டும் என்றால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, நியுமெரிக் கீ பேடில், 0150 என டைப் செய்திட வேண்டும். அதே போல, எம் டேஷ் அமைக்க வேண்டும் என்றால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, நியுமெரிக் கீ பேடில், 0151 என டைப் செய்திட வேண்டும். ஸ்பெஷல் கேரக்டர் எழுத்து குழுவிலும் இவை கிடைக்கும்.

இந்த இடைக்கோடுகளை, வேர்டில் பயன்படுத்துவது போலவே, எக்ஸெல் ஒர்க் ஷீட்டிலும் பயன்படுத்தலாம். எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், மைனஸ் அடையாளம் இல்லாத இடைக்கோடு பயன்படுத்தப்படுகையில், அதனை எக்ஸெல் டெக்ஸ்ட்டாக எடுத்துக் கொண்டு செயல்படும்.

சொற்களை அழிக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் சில சொற்களை நீக்க நினைப்போம். சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சிப்போம். சொற்களை அழிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. நாம் அதிகம் சிரமப்படாமல் இதனை நிறைவேற்ற சில வழிகள் நமக்கு உள்ளன. அவை குறித்து காணலாம்.
ஒரு சிலர், குறிப்பிட்ட சொல்லைத் தேர்ந்தெடுத்து, Delete கீயினை அழுத்தலாம்.

சிலர் அந்த சொல் அருகே கர்சரைக் கொண்டு சென்று, டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் அழியும் வரை அழுத்தலாம். ஆனால், இதற்கு அதிக நேரமும் முயற்சியும் வேண்டும். இதற்கு ஒரு ஷார்ட் கட் கீ உண்டு என்பதை அறிந்தால், இவர்கள் அதனைப் பயன்படுத்த விருப்பப்படலாம். கர்சரை சொல்லின் முன் வைத்து, கண்ட்ரோல் + டெலீட் (Ctrl+Del) கீகளை அழுத்தினால், கர்சர் எங்கு உள்ளதோ, அதிலிருந்து, சொல்லின் இறுதி வரை உள்ள எழுத்துகள் அனைத்தும் மறையும். எடுத்துக் காட்டாக, கர்சர் இருக்கும் இடத்திலிருந்து வலது புறமாக நான்கு சொற்கள் அழிக்கப்பட வேண்டும் என்றால், கண்ட்ரோல் + டெலீட் கீகளை நான்கு முறை அழுத்த வேண்டும்.

இந்த கீ களை அழிப்பதற்கு மட்டுமல்ல. வேகமாக எடிட் செய்திடவும் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, "sidestep" என்ற சொல்லை "sideways" என மாற்ற வேண்டும் என்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் "step" என்பதை அழித்து, அந்த இடத்தில் "ways" என டைப் செய்திடலாம். இதற்கு டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை நான்கு முறை அழுத்த வேண்டியதிருக்கும். ஆனால், இதற்கு இன்னொரு விரைவான வழி உண்டு. "step," என்ற சொல்லுக்கு முன்னால் கர்சரை வைத்து, கண்ட்ரோல்+டெலீட் ஒருமுறை அழுத்தினால், அந்த சொல் நீங்கிவிடும். பின்னர் "ways" என டைப் செய்துவிடலாம்.

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்:
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.


---------------------------------
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக