வேர்ட் புரோகிராமில், மாறா நிலையில் இருப்பது அங்குல அளவு மட்டுமே. ஆனால், வேறு பல அளவை அலகுகளுக்கு மாறிக் கொண்டு செயல்படவும் வழி தந்துள்ளது. இந்த வகையில், centimeters, picas, points, மற்றும் millimeters எனப் பல அளவுகளுக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு தருகிறேன்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டன் அழுத்தி, கீழாக வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கமாக உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இந்த பகுதியில் கிடைக்கும் அனைத்து ஆப்ஷன்களையும் ஒவ்வொன்றாக, மவுஸின் ஸ்குரோல் வீலை அழுத்திச் சென்று பார்க்கவும். இங்கு Display என்று ஒரு பிரிவு கிடைக்கும்.
4. இந்தக் கட்டத்தில், Show measurements in units of: என்று இருப்பதன் முன் உள்ள கட்டத்தில் கிடைக்கும் கீழ் விரி அம்புக்குறியில் கிளிக் செய்திடவும். இங்கு மாறா நிலையில், முதலில் Inches இருக்கும்.
கீழாக, பல அலகுகள் காட்டப்படும். உங்களுக்கு எது தேவையோ அதனைத் தேர்ந்தெடுத்து, சேவ் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த அலகில், மார்ஜின் மற்றும் பிற இருக்கும்.
----------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக