அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 9 மே, 2016

பதிலை தானாக அனுப்பும் வகையில், ஜிமெயிலை செட் செய்திட

விடுமுறையில் நாம் சென்றால், நமக்கு வரும் மின் அஞ்சல்களுக்கு, அது குறித்த பதிலை தானாக அனுப்பும் வகையில், ஜிமெயிலை செட் செய்திட



நாம் அலுவலகம் அல்லது வீட்டில் இல்லாத போது, நம் ஜிமெயிலுக்கு வரும் அஞ்சல்களை வேறு ஓர் ஊரிலிருந்தும் பார்த்து பதிலளிக்கலாம். ஆனால், ஓய்விற்கெனச் செல்கையில், சிலர் தங்களுக்கு வரும் அலுவலகக் கடிதங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என முடிவு செய்திருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அனுப்பப்படுவதற்கென ஜிமெயில் வசதியைத் தந்துள்ளது. இதனை vacation/holiday response என அழைக்கின்றனர்.

அலுவலக ரீதியாக அனுப்பப்படும் கடிதங்களுக்கு, உடனே பதில் தந்தாக வேண்டும். இந்த வசதி மூலம், அஞ்சலை அனுப்பியவருக்கு நீங்கள் விடுமுறையில் இருப்பது தெரிவிக்கப்படுவதால், அவர் உங்கள் அலுவலகத்தில் வேறு ஒருவரை நாடலாம் அல்லவா. இதற்குக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

முதலில் உங்கள் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள்.

தொடர்ந்து உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் பக்கத்தினைத் திறக்கவும்.

உடன் உங்களுக்கான இன்பாக்ஸ் திறக்கப்படும்.

இங்கு மேலாகக் காட்டப்படும் செட்டிங்ஸ் (Settings) வீல் ஐகான் மீது கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் கீழ் விரி மெனுவில், “Settings” பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு ஜிமெயில் தளத்தின் பல பிரிவுகள் காணப்படும்.

ஸ்குரோல் செய்து சென்று, “Vacation Responder” என்னும் பிரிவு செல்லவும்.

அதில் எந்த நாளிலிருந்து எந்த நாள் வரை விடுமுறையில் இருக்கப் போகிறீர்கள் என்று அமைத்திட வேண்டும்.
பின்னர், நீங்கள் தர விரும்பும் செய்தியினை அமைக்க வேண்டும்.

இது தனிப்பட்டுத் தெரிய வேண்டும் எனில், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் எழுத்துருவினை மாற்றி அமைக்கலாம். வண்ணத்தினையும் மாற்றலாம்.

பின்னர், அனைத்தையும் சேவ் செய்துவிட்டு வெளியேறவும்.

குறிப்பிட்ட காலத்தில், உங்களுக்கு வரும் அஞ்சல்களுக்கு, அவற்றை அனுப்பியவரின் மின் அஞ்சல் முகவரிக்கு இந்த பதில் செல்லும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக