பெர்சனல் கம்ப்யூட்டரில், எதேனும் ஒன்றை அழிக்கையில், அது எங்கு செல்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஐபேட் ஆகிய சாதனங்களில், கோப்பு ஒன்றினை அழிக்கையில் அது எங்கு செல்கிறது?
முதலில் 'அழிப்பது' என்பது, டிஜிட்டல் சாதனங்களில் எப்படி நிகழ்கிறது என்று பார்க்கலாம்.
அழித்தவுடன், அந்த கோப்பு சார்ந்த டேட்டா, உங்கள் சாதனத்தின் ஹார்ட் ட்ரைவிலிருந்து எடுக்கப்படுவதில்லை. நீங்கள் அந்த கோப்பினை அணுகுவதற்கான தொடர்பு மட்டுமே நீக்கப்படுகிறது. அத்துடன் அந்த கோப்பு வைத்திருந்த இடத்தில், சிஸ்டம் வேறு பைல்களை எழுதிக் கொள்ளலாம் என்ற சிக்னல் தரப்படுகிறது.
பெர்சனல் கம்ப்யூட்டரில், 'ரீசைக்கிள் பின்' (Recycle Bin) என்ற ஒரு பைல் உள்ளது. மேக் (Mac) கம்ப்யூட்டர்களில் இது Trash என அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில், அழிக்கப்பட்ட பைல்களை அணுகுவதற்கான லிங்க் எனப்படும் தொடர்பு குறியீடுகள் காக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் அழித்த பைல்களை மீண்டும் பெற விரும்பினால், இந்த தொடர்புகள் மீட்டெடுக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. ரீசைக்கிள் பின் அல்லது ட்ரேஷ் ஆகிய இடங்களிலிருந்து இந்த அழிக்கப்பட்ட பைல்களை நிரந்தரமாக அழிக்கையில் மட்டுமே, இந்த தொடர்புகள் நீக்கப்படுகின்றன.
மொபைல் சாதனங்கள் (ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபேட்) சிறிய அளவிலேயே ஸ்டோரேஜ் இடங்களைக் கொண்டிருப்பதால், அவற்றில் ரீசைக்கிள் பின் அல்லது ட்ரேஷ் ஆப்ஷன்கள் தரப்படுவதில்லை. எனவே, உங்கள் போனும், டேப்ளட் பி.சி.க்களும், நீங்கள் ஒன்றை அழிக்கும்போது, அவற்றை நீங்கள் அழிக்க முடிவு செய்ததை ஏற்றுக் கொண்டு, அதற்கான தொடர்பினை நீக்குகின்றன.
நீங்கள் அப்ளிகேஷன்களை மொபைல் போனில் உள்ள Trashcan ஐகானுக்குக் கொண்டு செல்லலாம்.
ஆனால், அதன் மூலம் அவை அழிக்கப்படுவதில்லை. ஹோம் ஸ்கிரீனிலிருந்து மட்டுமே நீக்கப்படுகின்றன. இந்த அப்ளிகேஷனில் உள்ளாக ட்ரேஷ் கேன் ஐகானில் ஹிட் செய்கையில், குறிப்பிட்ட பைல் மட்டும் நீக்கப்படும்.
ஆனால், இதற்காக, ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் ஒரு ட்ரேஷ் தொட்டி இருப்பதில்லை. ட்ரேஷ் ஐகானுக்கு ஒரு பைலைக் கொண்டு செல்கையில், நீங்கள் அந்த பைலை அழிப்பதில்லை.
ஒரு போல்டரிலிருந்து ட்ரேஷ் ஐகான் போல்டருக்குக் கொண்டு செல்கிறீர்கள். எனவே, இதிலிருந்து நீக்கப்படும் போது மட்டுமே, அவை நிரந்தரமாக நீக்கப்படுகின்றன.
இருந்தாலும், அவை இருந்த இடத்தில் வேறு ஒரு பைல் எழுதப்படும் வரை, அந்த இடத்தில் டேட்டா தங்கிக் கொண்டு தான் இருக்கும்.
வேறு ஒரு தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் வைத்துத்தான் அவற்றை மீட்டெடுக்க முடியும். ஆனால், அது 100% உறுதி இல்லை.
-----------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக