கேரளாவில் ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகள் இறப்பது குறித்து பாஜக தலைவர் அமித் ஷா பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்த புகைப்படம் உண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்டது.
கேரளாவில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் அவுட்லுக் பத்திரிக்கையின் 2013ம் ஆண்டு ஜூலை மாத பதிப்பின் அட்டைப் படத்தை காட்டி பாருங்க, கேரளாவில் உள்ள குழந்தையின் பரிதாப நிலையை பாருங்க என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உண்மையில் அந்த அட்டைப்படத்தில் இருக்கும் குழந்தை கேரளாவை சேர்ந்தது அல்ல மாறாக ஈழ அகதிக் குழந்தை. 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் அமித் ஷா கேரளாவில் எடுக்கப்பட்டதாக கூறினார்.
இலங்கை குறித்த செய்தியில் அமெரிக்க அரசு பயன்படுத்திய அதே புகைப்படத்தை அவுட்லுக்கில் கேரளாவில் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அமித்ஷாவும் சரிபார்க்காமல் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து அவுட்லுக் ஆசிரியர் கிருஷ்ண பிரசாத் கூறுகையில், இந்த விவகாரம் முதல் முறையாக எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுவரை யாரும் இந்த புகைப்படம் பற்றி எதுவும் கூறவில்லை. இது ஒரு என்.ஜி.ஓ. ஊழியர் அனுப்பி வைத்த புகைப்படம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக