அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 14 மே, 2016

தனக்கு வருமானம் இல்லை!! நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக கிறிமினல் லோயர் சிறிக்காந்தா குமுறுல்

 image source: google
 யாழ்ப்பாணத்தில் குற்றவாளிகளை தப்ப வைத்து வந்த கிறிமினல் லோயரும் ரெலோ உறுப்பினருமான சிறிக்காந்தா தனக்கு இனி வருமானம் வராது என்ற காரணத்தால் விடுத்த அறிக்கை இதோ!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்சாட்டுக்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.



குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்துமாறு, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தார்.

இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகத்தால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு உதவியாக விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

நடந்து முடிந்த போரில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் கொமாண்டோ படை அணியான விசேட அதிரடிப்படையை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துவது என்பது, கெடுபிடிகள் நிறைந்த பதற்றச் சூழ்நிலையை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்துவதோடு, எதிர்மறையான தாக்கங்களையும் விளைவுகளையும் கொண்டு வரலாம்.

யாழ்ப்பாணத்தில் நிகழும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குழுக்கள், முற்றுமுழுதாக அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுவதோடு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது. ஆனால், இச் சம்பவங்கள் தொடர்பான புலன்விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் அனைத்தும் பொலிஸாரிடம் இருப்பதே பொருத்தமானதும், உகந்ததும் ஆகும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பொலிஸாரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால், யாழ்ப்பாணத்தில் அங்கும் இங்குமாக கொள்ளைகளும், வன்முறை வெறியாட்டங்களும் நிகழ்ந்து வருகின்றன என்பதற்காக, விசேட அதிரடிப் படையினரை களத்தில் இறக்குவது ஆரோக்கியமானது அல்ல.

விசேட அதிரடிப்படை என்பது, போருக்கு பிந்திய இக்காலத்தில், பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாத கலகங்களை அடக்குவதற்கும், அசாதாரண மற்றும் அனர்த்தச் சூழ்நிலைகளில் சிக்குண்டோரை மீட்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர் குழுக்களையும் கிறிமினல் கும்பல்களையும் தேடிப் பிடிப்பதற்கு தேவைப்படவில்லை. இத்தகைய கடமைகள் சட்டத்தின் கீழ், சாதாரண பொலிஸாருக்கு மட்டுமே உரியவை.

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதிலும், குற்ற குழுக்களை கைது செய்வதிலும் பொலிஸாரிடம் எதிர்பார்க்கப்படும் வேகமும் வெற்றியும் இதுவரையில் கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

இதனைச் சாதிப்பதற்கு தமிழ் தெரிந்த மேலதிக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதோடு, பாரிய குற்றச் செயல்களில் புலன்விசாரணை மேற்கொள்வதற்கு விசேட பொலிஸ் குழுக்களும் அமைக்கப்பட வேண்டும்.

அத்துடன், குற்றத்தடுப்பு விடயத்தில் பொது மக்களின் பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக யாழ்ப்பாணம் முழுவதும் பொலிஸ் - பொதுமக்கள் நல்லுறவுக் குழுக்களும், விழிப்புக்குழுக்களும் அமைக்கப்படுவது உடனடி அவசியமானது.

பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களில் உள்ள பல சுறாக்கள் சிக்காமல் இருப்பதற்கும், பெரும்பாலும் நெத்தெலிகளே மாட்டிக் கொள்வதற்கும் காரணமாக, பாதுகாப்புக் கேடயம் ஏதாவது பின்னணியில் செயற்படுகின்றதா? என்று எழுந்திருக்கும் கேள்விக்கும் பதில் தேவைப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு என்பன சீர்குலைந்து விட்டன என்;ற தோற்றப்பாடு கூட, அரசியல் ரீதியாக சில தரப்புக்களுக்கு இன்று தேவையாக உள்ளது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறியாக வேண்டும்.

இந்த சூழ்நிலையில், தீவிர போர் அனுபவப் பின்னணி கொண்ட விசேட அதிரடிப்படையினை சட்டம் மற்றும் ஒழுங்கு என்பனவற்றை பராமரிக்கும் நடவடிக்கைகளுக்காக மக்கள் மத்தியில் இரவும் பகலும் வலம் வரச் செய்வது ஆரோக்கியமானது அல்ல என்பதோடு பாதகமானதும் கூட என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் பொலிஸ் படையினரை பொதுமக்கள் எதிர்பார்க்கும் அதேநேரத்தில், தேவைக்கு அதிகமான அழுத்தங்கள் பொலிஸார் மீது பிரயோகிக்கப்படுமானால் நிரபராதிகள் கைது செய்யப்படவும், ஆதாரங்கள் புனைந்துரைக்கப்படவும் குற்றச்சாட்டுகள் சோடிக்கப்படவும் அவை வழிவகுத்து விடும்.

சட்டம், ஒழுங்கு தொடர்பில், யாழ்ப்பாணத்தின் இன்றைய அவல நிலையை மாற்றுவதற்கு சமூகப் பொறுப்புள்ள அனைவரின் பங்களிப்பும் அவசியமானது. ஆகக்குறைந்தது அயலவரின் அபயக்குரல் கேட்டு உதவிக்கு ஓடி வரும் தைரிய உணர்வு கட்டாயமாக தேவைப்படுகின்றது.

இந்த பிரச்சினையில் எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய பொலிஸ் மா அதிபர் ஊடாக உரிய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த சிக்கலான பிரச்சினையில், நீதித்துறை காட்டும் அக்கறையும் கரிசனையும் பாராட்டப்பட்டே ஆக வேண்டும். ஆனால், நீதித்துறை கூட, அதன் வரையறைகளுக்குள் நின்று தான் செயற்படவேண்டும் என்பதையும் எவரும் மறுத்துரைக்க முடியாது.

நோக்கம் நல்லதாக இருப்பினும், அதை அடைவதற்கான மார்க்கமும் உகந்ததாக இருந்தால் மட்டுமே, அந்த நோக்கம் நிறைவேற முடியும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு:

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக கலாச்சார சீரழிவுகளும் வாள் வெட்டுக்களும் அதிகரித்திருந்த நிலையில் யார் கட்டுப்படுத்துவது என்கின்ற பாரிய வினாக்களுடன் யாழில் மக்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.

யாழில் போதை வஸ்து பாவனை, குடு, கஞ்சா போன்ற அனைத்துவிதமான தீய பழக்கங்களுக்கும் யாழ் இளைஞர்களை அடிமைப்படுத்தி ஒரு வர்க்கம் சுகபோகம் அனுபவித்து வந்தது.

இன் நிலையில் நல்லூர்க் கந்தனின் அருளால் அங்கு அனுப்பிவைக்கப்பட்ட அவதாரமெ நீதிபதி இளஞ்செழியன்.

முடியுமானவரை காவற்துறையின் ஒத்துழைப்புடன் யாழ் குடாநாட்டை சுத்தப்படுத்துவதற்கு இளஞ்செழியன் எத்தணித்த வேளையில் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

அவ்வேளையில் விஷேட அதிரடிப்படையினரை யாழ் குடாநாட்டுக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது நீதிபதி இளஞ்செழியனிற்கு

சட்டரீதியாக விஷேட அதிரடிப்படையினர் அழைக்கப்படுகின்றார்கள். விஷேட அதிரடிப்படையினர் எனப்படுவது காவற்துறையின் அதி விஷேட பிரிவே அன்றி அது இராணுவம் அல்ல.

விஷேட அதிரடிப்படையினரின் வரவால் யாழ் குடா நாடு ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது இந்த நிலை சட்டத்தரணி சிறிக்காந்தாவிற்கு பிடிக்க வில்லையா….??

இது புரியாத சட்டத்தரணி சிறிக்காந்தா விஷேட அதிரடிப்படையினரை இளன்செழியன் அழைத்தமை பிழை எனக்கூறி அதற்கு வேறு அர்த்தம் கற்பித்து குடாநாட்டை குழப்பகரமான நிலைக்குள் தள்ள எத்தனிப்பது புனிதமான சட்டத்துறையை களங்கப்படுத்தும் முயற்சி சிறிக்காந்தாவின் வங்குரோத்து நிலைமையே சுட்டிக்காட்டுகிறது.

இதே K.N.சிறிக்காந்தா நீதிபதி இளன்செழியனுக்கு எதிராக ஊடகங்களுக்கு அறிக்கை விடும்பொழுது தன்னை ரெலோவின் பொதுச்செயளாளராகவே அடையாளப்படுத்தியிருந்தார்.

அப்படியாயின் அந்தக் கட்சியும் இவ்வாறான நாசகார வேலைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றதா…?

காரணம் அண்மைக்காலமாக தலைமன்னாருக்கூடாக கோடிக்கணக்கான போதைப்பொருட்கள் வருவிக்கப்பட்டதுடன் அதில் ஒரு சில போதைப் பொருட்களையே பொலிசாரினால் கைப்பற்ரப்பட்ட போதிலும் மிகுதியானவை யாழ் குடாநாட்டுக்குள் புகுத்தப்பட்டுள்ளன. என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார்.

எனவே இவற்றை யாழ் குடாநாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் யார்…….? இதை நியோகிப்பவர்கள் யார் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

இந்த சிறிக்காந்தாவுக்கு யாழ் குடாநாட்டில் கற்பழிப்பாளர்களும் கஞ்சா கடத்தல்காரர்களும் வாள்வெட்டுக்காரர்களும் இல்லாவிட்டால் வழக்குகளே இல்லை. சொல்லப்போனால் அவருக்கு உழைப்பே இல்லை.

வித்தியா வழக்கிலும் தலையிட்டு வித்தியாவைக் கொலை செய்தவர்களை காப்பாற்ற முயற்சித்தார் எமது செய்தித் தாக்குதலால் புறமுதுகிட்டார்.

தற்பொழுது ரெலோவின் அரசியற் செல்வாக்கையும் தனது குறுக்குப் புத்தியையும் கொண்டு குடாநாட்டை போதைவஸ்து கலாச்சாரத்தில் கொடிகட்டி பறக்க விடுவதே இவரது குறிக்கோள்.

இதற்கு அவரது கட்சியும் இவரிற்கு முழுமையான அங்கீகாரம் வழங்கியது உண்மை அதற்கு ஆதாரம் ஒவ்வெரு தேர்தல்களிலெல்லாம் இவரே ரெலோவின் புனித வேட்பாளர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு ரெலோவின் பதிலென்ன…?

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் பேசி மக்களை ஏமாற்றும் அக்கட்சியின் தோழர்கள் 1989 – 1990 காலப்பகுதியில் நடந்த வியாபாரத்தை ஆரம்பிக்க தயாராகி விட்டார்களா…..???

அப்படி இல்லை ஆயின் எதற்காக K.N.சிறிக்காந்தாவிற்கு அக்கட்சியின் பலமான பதவிகள்…..???? கட்சியின் நிலைப்பாடு என்ன???

துாய்மையான அரசியல் என்றால் வெளிப்படுத்துங்கள் உண்மையை அல்லது இதை விட பெரிய ஆதாரங்களை அம்பலப்படுத்தி கட்சியையும் தோழர்களையும் திருத்த வேண்டி வரும் அதற்கு தாயாரா…?

ரெலொவின் நிலைப்பாடு நீதிபதி இளஞ்செழியனை யாழில் இருந்து வெளியேற்றுவது தான் இறுதி முடிவு என்றால் குடா நாட்டின் அத்தனை லட்சம் மக்களின் நிலைப்பாடு என்ன?? உங்களுக்கும் ரெலொவின் நிலைப்பாட்டில் உடன்பாடா?? நீதிபதியை வெளியேற்றுவதில் மக்களே நீங்களும் உடந்தையா…….???


newtamils
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக