image source: google Col. Vithusha
(பகுதி - 1சரணடையும் பொதுமக்களைச் சுட விதுஷா உத்தரவிட்டார்
மாலதி படைப்பிரிவின் தளபதி விதுஷா, கேணல் தமிழினி தன்னை நோக்கி நடந்து வருவதைக் கண்ட உடனேயே அழ ஆரம்பித்தார். இந்தச் சந்திக்கும் வாய்ப்பு கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதிக்கு கிழக்கே எஞ்சியிருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் கடைசிக் கோட்டைகளில் ஒன்றான சுகண்டிபுரத்தில் இடம்பெற்றது. கேணல் தமிழினி, விதுஷாவை மேற்கோள் காட்டி அவள் தன்னிடம் தெரிவித்ததாகச் சொல்லியிருப்பது, இயக்கத்தின் நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது தனக்கு சங்கடமாக இருக்கிறது என்று. இராணுவத்திடம் சரணடைய விரும்புவோரை முங்காலுக்கு கீழே சுடும்படி உயர்மட்ட தலைமையிடம் இருந்து தனக்கு உத்தரவுகள் கிடைத்து வருவதாக விதுஷா வெளிப்படுத்தினாள். அந்த கட்டளைகளையிட்டு அவள் ஆத்திரமடைந்து இருந்தாலும் நிலமையைப் பற்றி சில அங்கத்தவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தாள். அவர்கள் அவளிடம் எப்படி தங்கள் சொந்தங்களைச் சுட முடியும், அதைவிட நாங்களே எங்களைச் சுட்டுவிடுவது சிறந்தது என்று சொன்னார்கள்.
கேணல் தமிழினி விதுஷாவை மேற்கொள் காட்டி, அவள் வருத்தத்துடன் சொன்னதாகத் தெரிவிப்பது பெருந்திரளான பொதுமக்களை சுடும்படி கட்டளையிடும் நிலைக்கு இயக்கம் தாழ்ந்ந்து விட்டது என்று.
சுப்பிரமணியம் சிவகாமி என்கிற கேணல் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’; என்பதின் சிங்கள மொழிபெயர்ப்பான ‘தியுனு அசிப்பத்தக்க செவன யட்ட’ என்கிற நூலில் வன்னியின் கிழக்கு முன்னரங்கின் இறுதிக்கட்ட போரைப்பற்றி மிக நெருக்கமாக கையாளப்பட்டுள்ளது.
புலிகளின் பெண்கள் அரசியல் பிரிவு தலைவராக நியமிக்கப் படுவதற்கு முன்பு தமிழினி எல்.ரீ.ரீ.ஈ யினது முன் வரிசை போராட்ட அமைப்பில் பணியாற்றியுள்ளார், முன்னேறிவரும் அரசாங்கப் படைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு புலனாய்வு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் அபத்தமான முயற்சிகளைப் அவர் வாதித்துள்ளார். போராடும் அமைப்புகளினால் அனுபவிக்க நேரும் கடும் சிரமங்களை கவனத்தில் கொள்ளாது பொட்டு அம்மானால் வழங்கப்படும் கட்டளைப் பிரவாகங்களையிட்டு எல்.ரீ.ரீ.ஈயின் மூத்த தளபதிகள் கடும் கோபம் கொண்டிருந்தார்கள். ஜனவரி, 2009 முதல்வாரத்தில் எல்.ரீ.ரீ.ஈ கிளிநொச்சியை கைவிட்டுச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டதை அடுத்து உடனடியாக போராட்ட அமைப்புகளுக்கு ஏற்படப்போகும் கதியை அலட்சியம் செய்ததினால் பொட்டு அம்மான் தனது சக தளபதிகளின் கோபத்துக்கு ஆளாகியிருந்தார்.
ஒரு கூர்வாளின் நிழலில் மார்ச் 19, 2016ல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்ட போதிலும், உண்மையை அறியவேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்கள் கேணல் தமிழினியின் முதல் கை அனுபவங்களைப் பற்றி வித்தியாசமான முறையில் அமைதியாக இருந்தார்கள். அதன் சிங்களப் பதிப்பு மே 13, 2016ல் ஸ்ரீலங்கா அறக்கட்டளைகள் நிறுவனத்தில் (எஸ்.எல்.எப்.ஐ) வைத்து வெளியிடப்பட்டது.
கேணல் தமிழினியின் கணவரான ஜெயகுமாரன் மகாதேவன் ஸ்ரீலங்கா வம்சாவளியை சேர்ந்த ஒரு பிரித்தானிய பிரஜையாவர், இந்த அதிர்ச்சி தரும் நினைவுகளை வெளியிட்டதுக்காக தமிழ் அரசியல்வாதிகளின் செல்வாக்குள்ள ஒரு பகுதியினர் அதேபோல தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் ஆகியோரின் கோபத்துக்கு அவர் ஆளாகியுள்ளார்.
ஜனவரி,2009ல் அநேக போராட்ட அமைப்புகள் வன்னி கிழக்கு முன்னரங்கில் பெருமளவிலான தாக்குதல் நடவடிக்கைளில் ஈடபட்டிருந்தன. இராணுவம் வன்னி மேற்கில் போராடிவந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை பூண்டோடு அழித்தது மற்றும் எஞ்சியிருந்த படை பிரிவுகள் யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 வீதிக்கு குறுக்காக இருந்த வன்னி கிழக்கில் சுற்றிவளைக்கப் பட்டன. ஆனால் இராணுவத்தை எதிர்க்கும் அதன் திறன் வேகமாக இழக்கப்பட்டு வந்தாலும் அதையும் மீறி எல்.ரீ.ரீ.ஈ தொடர்ந்து எதிர்த்து வந்தது.
தனது சக தளபதிகள் பெரும்பாலானோரின் கோபத்திற்கு மத்தியிலும் பொட்டு அம்மான் அங்கவீனரான அங்கத்தவர்களை, எல்.ரீ.ரீ.ஈ யின் பிரதான கோட்டையான ஏ9 வீதிக்கு கிழக்கில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினரை விரட்டுவதற்காக வெடிமருந்துகளுடன் நிலைகொள்ளச் செய்தார். பொட்டு அம்மானின் உத்தரவின் பேரில் ஊனமுற்ற அங்கத்தவர்கள் புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறிவரும் துருப்புகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். எல்.ரீ.ரீ.ஈ யின் புலனாய்வு பிரிவின் தலைவர் மேலும் கிளைமோர் தாக்குதல்களை மேற்கொள்ளும்படி கரும்புலிகளுக்கு ஆணையிட்டார். வெற்றி பெறமுடியாத இறுதிக்கட்டப் போரின்போது பெரும் எண்ணிக்கையிலான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அழிந்து போனார்கள் என்று கேணல் தமிழினி பிரகடனப் படுத்தியுள்ளார்.
பொட்டு அம்மானுக்கு எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆசீர்வாதம் கிடைத்திருக்க வேண்டும் என்று கேணல் தமிழினி அனுமானிக்கிறார். அவர் பிரபாகரனை மேற்கோள் காட்டி கேணல் தமிழினி கூறுவது, கரும்புலிகள்தான் பலவீனமான சமூகத்தின் சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை தான் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் அறிவித்ததாக.
பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவரும் பெரும் திரளான தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டால் இராணுவத்தை தடுத்து நிறுத்திவிட முடியும் என நம்பினார்கள். பெப்ரவரி,2009 முதல்வாரத்தில்; 59.3 இராணுவ படைப் பிரிவின்மீது புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் நடத்தப்பட்ட கரும்புலிகளின் தற்கொலை தாக்குதல்கள் பற்றி கேணல் தமிழினி குறிப்பிடுகையில், அந்தக் குழுவிற்கு இராணுவத்தை தடுத்து நிறுத்துவதற்கான ஆதாரசக்தி குறைவாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். உலக சமூகங்கள் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பு என்று இதுவரை நம்பியிருந்த ஒரு அமைப்பின் தோல்வியைக் கண்டு சந்தேகமும் மற்றும் அதிர்ச்சியும் அடைந்ததாக அவர் சொல்லியுள்ளார். பிரபாகரனின் தன்னிச்சையான முடிவுகள்தான் தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியது என்று கேணல் தமிழினி வலியுறுத்துகிறார்.
கருணா உட்பட ஏனையவர்களைப்பற்றி பொட்டு அம்மான் தொடர்ச்சியாக புகார் தெரிவிப்பதை பிரபாகரன் தவறு என்று கருதியபோதிலும் அவர் வெளிப்படையாக அதில் தலையீடு செய்ததில்லை. மாலதி படைப்பிரிவின் தளபதி கேணல் விதுஷா பொட்டு அம்மானின் நடத்தைகளையிட்டு ஏமாற்றம் அடைந்திருந்தார், விதுஷாவை மேற்கோள் காட்டி, இரணைப்பாலையில் உள்ள ஒரு மருத்துவ வசதியில் வைத்து, களத்தில் உள்ள அப்பட்டமான யதார்த்தங்களை பொட்டு அம்மான் கருத்தில் கொள்ளாததையிட்டு அவர்மீது தான் கொண்டிருந்த சிறிதளவு மதிப்பையும் கைவிட்டு விட்டதாக அவள் தன்னிடம் தெரிவித்ததாக கேணல் தமிழினி கூறுகிறார். வன்னி கிழக்கு முன்னரங்கின் இறுதிக்கட்ட போராட்டத்தின்போது, கேணல் விதுஷா பொட்டு அம்மான் சகிதம் இருந்த பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்த சிறிது நேரத்திலேயே தமிழினி அவளைச் சந்தித்தார்.
கேணல் தமிழினி ஒக்ரோபர் 2015ல் புற்றுநோயால் உயிரிழந்தார். ஒருவேளை அவரது வெளிப்படுத்தல்கள் ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினாலும் மற்றும் அதேபோல அரசாங்கத்தினாலும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வன்னி கிழக்கில் நடைபெற்ற தாக்குதல் நடவடிக்கைகள் சம்பந்தமாக விசாரிக்க வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ யின் கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் சர்வதேச நிபுணர்கள் உட்பட பரணகம விசாரணைக்குழுவின் நிபுணத்துவத்தை தேடுவதில்; தீவிர அக்கறை காட்ட வேண்டும். பரணகம அறிக்கையின் கூறுகளைச் சோத்து வெளியிடும் வாய்ப்பினை அரசாங்கம் அலட்சியம் காட்டக்கூடாது. பரணகம ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் குழுவில் சேர். டெஸ்மன் டி சில்வர் இராணி வழக்குரைஞர் (ஐக்கிய இராச்சியம்), பேராசிரியர் ஜெப்ரி நைஸ் ; இராணி வழக்குரைஞர் (ஐக்கிய இராச்சியம்), பேராசிரியர் டேவிட் எம் கிரேன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோர் உள்ளனர். இந்த குழு ஒரு காலத்தில் விசேட வான் படையின் (எஸ்.ஏ.எஸ்) கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர்.ஜெனரல். ஜோண் ஹோம்ஸ் உட்பட அநேக நிபுணர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
போர்க்குற்றம் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை எழுப்புபவர்களுக்கு கேணல் தமிழினியின் வெளிப்படுத்தல்கள் அதிர்ச்சியை அளித்திருக்கும். அவருடைய நினைவுகள் மார்ச், 2011 ஐநா பிரகடனங்களின் பின்னணியில் விசாரிக்கப்பட வேண்டும் அவர்கள் முந்தைய அரசாங்கத்தின்மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுகள் எந்தச் சூழ்நிலையிலும் 2031வரை குறுக்கு விசாரணை செய்யப்படக் கூடாது என்கிற நிபந்தனைக்கு உட்டபட்டவையாகும் (யு.என்.எஸ்.ஜி நிபுணர் குழுவின் அறிக்கை, மார்ச்31,2011). இதன் அடிப்படையில் மேற்கொண்ட ஒரு இரண்டாவது விசாரணையில் யு.என்.எச்.ஆர்.சி இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டகளை வெளியிட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தவிர்த்துவிட்டு, ஒரு தீர்மானத்தை 2015 ஒக்ரோபர், 1ல் நிறைவேற்றியதினால் ஒரு கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவதற்கும் வழிபிறந்தது. பொறுப்புக்கூறல் நடவடிக்கையை முன்னேற்றும் கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு நிதியுதவிகளுடன் செயல்படும் சிவில் சமூக அமைப்புகள், இந்த மரணித்த பெண் புலியின் நினைவுகளை, அவரது கணவர் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளரும் ராஜபக்ஸ அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தவருமான தர்மசிறி பண்டாரநாயக்காவின் உதவியுடன் வெளியிட்டுள்ள இந்த நூலைப்பற்றிய தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
சாமிந்திரா பேர்டினான்டோ
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக