செல்களைச் சுற்றி கோடுகள்: நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. நீங்கள் பார்டர் அமைக்க விரும்பும் செல் அல்லது செல்வரிசையை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவிலிருந்து Cells என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இதில் Border டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. டயலாக் பாக்ஸில், Border என்னும் பிரிவில், நீங்கள் எந்த இடத்தில் பார்டர் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Outline என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், செல் முழுவதுமாக பார்டர் அமைக்கப்படும்.
5. Style பிரிவில், எந்தவிதக் கோட்டில் பார்டர் அமைக்கப் பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
இன்னொரு வழியும் உள்ளது. டூல்பாரில் உள்ள Borders என்னும் டூலைப் பயன்படுத்தியும் பார்டர் கோடுகளை அமைக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி, இந்த டூலைப் பயன்படுத்த வேண்டும்.
1. பார்டர் அமைக்கப்பட வேண்டிய செல் அல்லது செல் வரிசையத் தேர்ந்தெடுக்கவும்.
2. நீங்கள் அமைக்க விரும்பும் பார்டர் வகை பார்டர்ஸ் டூலில் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். இத்துடன் உங்கள் வேலை முடிந்துவிடும். இல்லை எனில், இங்கு குறிக்கப்பட்டுள்ளபடி தொடரவும்.
3. பார்டர்ஸ் டூலின் வலது புறம் உள்ள கீழ் நோக்கிய சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்திடவும். பலவகையான பார்டர் வகைக் கோடுகள் அடங்கிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் பார்டர் வரியைத் தேர்ந்தெடுக்கவும். அவுட்லைன் பார்டரைப் பயன்படுத்தி, நீங்கள் அமைக்க விரும்பும் செல் வரிசையைத் தேர்ந்தெடுக்கலாம். இது பார்டர் கட்டத்தில், கீழாக வலதுபுறம் கிடைக்கும்.
பார்டர் கோடுகளை செல் அல்லது செல் வரிசைகளில் அமைக்க, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தாலும், இவற்றை நீக்க விரும்பினால், மிக எளிய வழி ஒன்று நமக்குக் கிடைக்கிறது. கண்ட்ரோல் கீயுடன், அண்டர் ஸ்கோர் கீயை (underscore) அழுத்த வேண்டும் (Ctrl+_) அமைக்கையில் ஷிப்ட் கீயையும் அழுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும்). செல்களில் உள்ள பார்மட் கூறுகளில், பார்டர்கள் மட்டுமே, இந்தக் கட்டளையால் நீக்கப்படும். மற்றவை அப்படியே இருக்கும்.
படுக்கை / நெட்டு வரிசை மாற்றம்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். இதனை எப்படி மாற்றுவது? நான்கு அல்லது பத்து செல்கள் என்றால் ஒவ்வொன்றாக டைப் செய்துவிடலாம் என்று நீங்கள் முயற்சிக்கலாம். இதுவே அதிகமான எண்ணிக்கையில் செல்கள் உள்ள ஒர்க் ஷீட்டாக இருந்தால் என்ன செய்வது?
எக்ஸெல் இதற்கு அருமையான ஒரு வழி தந்துள்ளது. எந்த செல்களில் உள்ளதை மாற்ற வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அந்த செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுங்கள். பின் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடுங்கள். அடுத்து எங்கு மாற்றத்துடன் வரிசையை அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் முதல் செல்லுக்குச் செல்லுங்கள்.
பின் ALT + E + S அழுத்துங்கள்.அல்லது எடிட் மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இப்போது பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் கீழாக ட்ரான்ஸ்போஸ் (Transpose) என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் எதிர்பார்த்தபடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக