அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 4 ஜூன், 2016

புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தமக்கு உயிராபத்து- தமிழினியின் கணவர்

 தமிழினி, ஜெயகுமார் மகாதேவன்
விடுதலைப் புலிகளின் மகளிர் அணி முன்னாள் பொறுப்பாளரான காலஞ்சென்ற தமிழினியின் கணவர் ஜெயகுமார் மகாதேவன், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரின் போது நிகழ்ந்தமை தொடர்பில் தமிழினியின் நூல்கள் வெளியிடப்பட்டமையை அடுத்தே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒரு பிரிவினரே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழினியின் நூல்களை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நிலையில்அவற்றை ஆங்கில மொழியிலும் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று ஜெயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக