Jackline Mwende (pictured) was brutally slashed by Stephen Ngila at her home in Masii, Machakos County after he told her 'Today is your last day'
கணவர் ஒருவர், தான் இனவிருத்தி ஆற்றலற்றவர் என்பதை அறிந்திருந்த நிலையிலும் திருமணமாகி 7 வருடங்களாகியும் கர்ப்பந்தரிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி தனது மனைவியின் கரங்களை வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் கென்யாவில் இடம்பெற்றுள்ளது.
Mwende, 27, was also left with horrific injuries to her head. The case has sparked outrage in Kenya
மசாகொஸ் பிராந்தியத்திலுள்ள மாஸ்லி எனும் இடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் நகிலா (34 வயது) என்ற கணவரே இவ்வாறு தனது மனைவியான ஜக்லின் மவென்ட்டின் (27 வயது) கரங்களை வெட்டித் துண்டித்துள்ளார்.
அவர் தனது மனைவியிடம்' "இன்றைய தினம் உனது இறுதி நாளாகும்" எனக் குறிப்பிட்ட பின்னரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
குழந்தைப் பேறு இல்லாமை குறித்து மருத்துவ உதவியைப் பெறச் சென்ற மேற்படி இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்டீபன் நகிலா இனவிருத்தி ஆற்றலற்றவர் என்பதை உறுதிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் ஸ்டீபன் நகிலா தனது குறைபாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து ஜக்லினே குழந்தையின்மைக்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டி வந்தார்.
இதனையடுத்து ஸ்டீபன் நகிலாவும் அவரது மனைவியும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.
இந்நிலையில் 3 மாதம் கழித்து வீடு திரும்பிய ஸ்டீபன் நகிலா, பாரிய வெட்டுக் கத்தியால் தனது மனைவியை தாக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஜக்லின் மவென்ட்டின் இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன.
ஸ்டீபன் நகிலா தனது மனைவியைக் கொல்லும் முகமாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படுகிறது.
இதனையடுத்து ஜக்லின் மவென்ட் அயலவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேற்படி சம்பவம் இடம்பெற்று ஒரு நாள் கழித்து ஸ்டீபன் நகிலா கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பில் ஜக்லின் மவென்ட் கூறுகையில், “நான் அவரை மிகவும் நேசிக்கிறேன் என்பதை அறிந்திருந்தும் இரக்கமற்ற முறையில் அவர் என்னைக் கொல்ல முயற்சித்தார்" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக