அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1ல் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் மிகவும் குறைந்தால்......

பொதுவாகவே, ஹார்ட் டிஸ்க்கில் அதிக எண்ணிக்கையில் பைல்கள் குவிந்து விட்டால், அவை வரிசையாகப் பதியப்படாமல் சிதறலாக இருந்தால், கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் மந்த நிலை ஏற்படும்.

பைல்களை நீக்குவதற்கான வழிமுறைகள்



தேவையற்ற பைல்களை நீக்குவதற்கு ஐந்து நிமிடங்கள் உங்களுக்கு இருந்தால் போதும்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் Disk Cleanup என்ற டூலை, ஸ்டார்ட் மெனுவின் தேடல் கட்டத்தின் மூலம் தேடிப் பின்னர் இயக்கவும்.

விண்டோஸ் 8.1ல், Free up disk space என்று டைப் செய்து தேடவும்.

பின்னர் அதனை இயக்கவும்.

விண்டோஸ் இந்த டூல்கள் மூலம், உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் தேடி, தேவையற்ற பைல்களைப் பட்டியல் இடும்.

இவை நீங்கள் தரவிறக்கம் செய்த புரோகிராம் பைல்கள், தற்காலிக இன்டர்நெட் பைல்கள், பொதுவான தற்காலிக பைல்கள், இணையப் பக்கங்கள், விண்டோஸ் பிழைக் குறியீடு குறித்த அறிக்கைகள் எனப் பலவகைகளில் இருக்கும்.

இவற்றை நீக்கினால், எவ்வளவு இடம் உங்களுக்குக் கிடைக்கும் எனவும் தகவல் இருக்கும்.

இந்த பைல்களில் கிளிக் செய்தால், இவை உங்கள் கம்ப்யூட்டரில் எதற்குப் பயன்படும்? என்ற விபரம் கிடைக்கும்.

ஒவ்வொன்றும் தேவை இல்லை என முடிவு செய்தால், உடன் அருகில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.

பின்னர், ஓகே கிளிக் செய்தால், பைல்கள் அனைத்தும் நீக்கப்படும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக