அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 28 டிசம்பர், 2016

யாழில் நாய் சண்டை

தான் வளர்த்த உயர்ரக பெண்நாயுடன் பக்கத்து வீட்டு சாதாரண நாய் உறவு கொண்டதால் பக்கத்து வீட்டு நாயின் உரிமையாளரான முதியவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார் குடும்பஸ்தர் ஒருவர்.



நல்லுார்ப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது பெறுமதிமிக்க உயர்ரக நாய் ஒன்றை இனக்கலப்பு செய்து குறித்த நாய் போடும் குட்டிகளை விற்பனை செய்து வருவதை தொழிலைச் செய்துவந்த ஒருவரே தனது பக்கத்து வீ்ட்டு முதியவரைத் தாக்கியதுடன் அவரது ஆண் நாயையைம் கடும் காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

முதியவரின் நாய் குறித்த உயர்ரக நாய் நின்ற வீட்டு மதிலையும் தாண்டிக் குதித்து அந்த உயர்சாதி நாயுடன் உறவு கொண்டிருந்த போது குறித்த குடும்பஸ்தர் அந் நாயை அந்த இடத்தில் வைத்தே கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.

தனது நாயின் அவலச் சத்தம் கேட்டு பக்கத்துவீட்டுக்கு ஓடிய முதியவர் தனது நாய் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதனைத் தடுக்க முற்பட்ட போதே முதியவரும் தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் முதுகுப் பகுதியில் தடியால் அடிக்கப்பட்ட பாரிய தளம்புடன் முதியவர் தனியார் வைத்தியசாலைக்கு அயலவர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு முறையிடுவதற்கு அயலவர்கள் ஆயத்தமாகிய போது முதியவர் பெருந்தன்மையுடன் அவ்வாறு செய்ய மறுத்ததாகத் தெரியவருகின்றது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக