யோகா ஒரு விளையாட்டாக கொள்ள முடியாது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்து அதற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இனி யோகா ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் வரும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றத்தில் இருந்து யோகாவுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.
பிரதமர் மோடியும் பெரிய அளவில் யோகாவை பிரச்சாரம் செய்து வந்தார். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் யோகா ஒரு விளையாட்டு என்ற அங்கீகாரம் மோடியால் வழங்கப்பட்டது. மேலும் யோகாவை முதன்மை விளையாட்டு என்ற பட்டியலில் கீழ் வைக்கப்பட்டது. இதன் மூலம் இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு நிதியுதவி கிடைக்க வழி வகை செய்யப்பட்டது.
இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், யோகாவிற்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. மற்ற விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்துவது போன்று யோகாவில் போட்டிகள் நடத்த முடியாது என்று அங்கீகாரம் ரத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த விளையாட்டு, முதன்மை விளையாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறதோ அந்த விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டி, ஒலிம்பிக் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும். ஆனால் யோகாவை விளையாட்டாக கருத முடியாது என்றும் எந்த வகையிலும் யோகா போட்டிகளை நடத்த முடியாது என்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதனால் ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் யோகா கொண்டு வரப்பட்டுள்ளது.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக