அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஒரு குழுவை அமைக்க

நண்பர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து உறவாட, தொடர்ந்து இணைப்பில் இருக்க, வாட்ஸ் அப் செயலி ஒரு நல்ல, எளிய சாதனம். எஸ்.எம்.எஸ். மூலம் குழுக்களை அமைப்பது போல இதிலும் அமைத்துத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எப்படி இந்த குழுக்களை அமைத்து இயக்குவது என்ற தகவல்களைப் பார்க்கலாம்.



முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில், வாட்ஸ் அப் செயலியை இயக்கிக் கொள்ளவும்.
ஆப்பிள் ஸ்மார்ட் போன் எனில், New Group என்பதில் தட்டவும்.

ஆண்ட்ராய்ட் எனில், மெனு ஐகானில் கிளிக் செய்து, பின் கிடைக்கும் மெனுவில் New Group என்பதில் கிளிக் செய்திடவும்.

பின்னர், உங்கள் Contact பட்டியல் சென்று, யாரை எல்லாம் குழுவில் இணைக்க வேண்டுமோ, அவர்கள் பெயர்களை தட்டி அமைக்கவும்.

முடிந்த பின்னர், Next என்பதில் தட்டவும். பின்னர் குழுவிற்கான பொதுப் பொருள் (Subject) ஒன்றை அமைக்கவும்.

அல்லது அதற்கான சிறிய படம் ஒன்றையும் அமைக்கலாம்.

தொடர்ந்து Create என்பதில் தட்டவும்.

இப்போது உங்கள் குழு இயங்கத் தயாராய் இருக்கும். இதில் அனுப்பப்படும் செய்தி, தகவல்கள், படங்கள் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ள அனைவரின் ஸ்மார்ட் போன்களில் காட்டப்படும்.

இந்தக் குழுவினை நிர்வகிக்க, அதன் பெயரில் கிளிக் செய்திடவும்.

இங்கு புதிய நபர்களை இணைக்கலாம்.

இணைந்த நபர்களை நீக்கலாம்.

உங்களுடன் இன்னொரு நபரையும் Admin ஆக நியமிக்கலாம்.

அவருக்கும், நண்பர்களை இணைக்க, நீக்க வழிகள் கிடைக்கும்.

அதே போல, குழுவின் பெயரை மாற்றலாம்.

பின் மீண்டும் பழைய பெயரையே அமைக்கலாம்.

அனைவரும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே பேஸ்புக் நிறுவனரின் இலக்கு. அதற்கு இந்த வாட்ஸ் அப் இப்போது பெரிய அளவில் உதவி வருகிறது.

இன்னொரு கொசுறு செய்தி : பெர்சனல் கம்ப்யூட்டரிலும் வாட்ஸ் அப் செயலியை இயக்கலாம். ஆனால், ஒரு ஸ்மார்ட் போனின் பதிலியாகத்தான் இது செயல்படும்.

உங்கள் ஸ்மார்ட் போன், வாட்ஸ் அப் செயலியை இயக்கிய நிலையில் பெர்சனல் கம்ப்யூட்டர் அருகே இருக்க வேண்டும். பெர்சனல் கம்ப்யூட்டரில் இருப்பதனால், வாட்ஸ் அப் செயலியில் பெறப்படும் இணைப்புகளை எளிதாகத் தரவிறக்கம் செய்திட முடியும். வேகமாக டைப் செய்திட முடியும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக