அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

இனி சமூக வலைத்தளங்களில் 'இதையெல்லாம்' செய்தால் சட்ட விரோதம்.!!

இன்றைய டிஜிட்டல் மேம்பட்ட வாழ்க்கை முறையானதில், இண்டர்நெட், கூகுள், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் இல்லாமல் ஒரு நாள் முழுமையடையாது. இன்னும் குறிப்பிட்டு சொன்னால் இவைகள் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத வண்ணம் நாம் சார்ந்து பயன்படுத்தி வாழ்கிறோம்.



இண்டர்நெட் உடன் நாம் மிகவும் சார்ந்திருக்க வேலை, பொழுதுபோக்கு அல்லது நேரம் செலவழிப்பதற்காக என பல காரணங்கள் நம்மிடம் உள்ளன. அதுவொரு பபக்கமிருக்க நம்மில் மிகவும் பெரும்பாலனோர்கள் இணையத்தை மிகவும் எளிமையானதாக நினைத்து சாதாரணமாக கையாளுகிறோம். ஆனால் இணையத்திலும் வரம்புகள் மற்றும் நிபந்தனைகள்உள்ளன, மீறினால் அவை சட்ட விரோத காரியமாக மாறிவிடும் என்பதை பற்றி நீங்கள் அறிவீர்களா.? அதை விளக்கும் தொகுப்பே இது

ஆன்லைன் ரெக்கார்டிங் ஒரு ஆன்லைன் வீடியோ அல்லது ஆன்லைன் அழைப்பு ஆகியவைகளை ரெக்கார்ட் (பதிவு) செய்வதும் ஒரு சட்ட விரோதமான காரியமாகும். கூகுள் ப்ளேவில் குரல் மேட்டரும் வீடியோ அழைப்புகளை பதிவு செய்ய அனுமதிக்கும் பல ஆப்ஸ்கள் கிடைக்கின்றன. அவைகளை பயன்படுத்தி ரெக்கார்ட் செய்வது என்பது சட்டத்துக்கு எதிரானதாகும்.

காப்பிரைட்ஸ்
இணையத்தில் தோன்றும் பல விடயங்கள் பதிப்புரிமை கொண்டவைகள் ஆகும் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றை பயன்படுத்த உரிமம் பெறவில்லை என்றால் அதை பதிவிறக்கம் செய்ய கூடாது அது சட்டவிரோதமானதாகும். ஆக எதை பதிவிறக்கம் செய்யும் முன்பும் காப்பிரைட்ஸ் பற்றிய விவரங்களை அறிந்துக் கொள்ள தவறாதீர்கள்.

கண்காணிப்பு
கிட்டத்தட்ட அனைத்து சமூக ஊடக தளங்களிலும் கிண்டல் (ட்ரோல்) செய்வது ஒரு வழக்கமான ஒரு அம்சமாகி விட்டது. ட்ரொல்லிங் என்பதை பொறுத்தமட்டில் ஒரு பெரிய ஆளுமை, அரசியல்வாதி அல்லது கூட ஒரு நண்பராக இருப்பினும் கூட அது சட்டவிரோதமாகும். சாதாரணமாக நினைக்காமல், நீங்கள் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே உள்ளீர்கள் என்பதை நினைவில் கொண்டு இதையொரு தீவிர பிரச்சினையாக கருதினால் அவதூறு வழக்கில் நீங்கள் சிக்காமல் இருப்பீர்கள்.

சைபர் புல்லியிங்
சமீப காலமாக நாட்டில் பல ஹேக் குற்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது அப்படியாக நீங்கள் எப்போதாவது இதுபோன்ற தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப்பட்டு கண்டறியப்பட்டால் நீங்கள் நிச்சயமாக மன்னிக்கப்பட மாட்டீர்கள். சைபர் தாக்குதல் சம்பவங்கள் நிச்சயமான ஒரு கிரிமினல் குற்றமாகும்.

போலி அடையாளங்கள்
எந்த சமூக ஊடக அரங்காக இருப்பினும் அதில் போலி கணக்குகள் மில்லியன் கணக்கில் உள்ளன. அம்மாதிரியாக உங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து ஆன்லைனில் பித்தலாட்டம் செய்வது ஒரு கிரிமினல் குற்றமாகும் அது தீவிர பிரச்சினையில் முடியும் என்பதை மறக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் ஒரு போலி அக்கவுண்ட் வைத்துள்ளீர்கள் என்றால் உங்கள் வழியில் கடுமையான பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம். ஏனெனில் நீங்கள் கற்பனைக்கூட செய்து பார்க்காத அளவில் இண்டர்நெட்டில் எல்லாமே கண்காணிக்கப்படுகிறது.

இலவச வைஃபை
இறுதியாக, உங்களுக்கு சற்றும் தொடர்பே இல்லாத வேறு ஒரு வைஃபை நெட்வொர்க் உடன் உங்களை நீங்கள் இணைத்துக் கொள்வதும் நிச்சயமாக தாக்குதல் செயலாகும். ஒருவேளை வேண்டுமென்றே பாதுகாக்கப்படாத வைஃபை இணைப்புகள் உங்களுக்கான பொறியாக இருக்கலாம், சிக்கி கொள்ள வேண்டாம். எனவே, இனிமேல் இலவச வைஃபை பயன்படுத்தும் முன் கவனமாக இருங்கள்.

Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக