அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 16 டிசம்பர், 2016

He, She இற்கு பதிலாக Ze எனும் பொதுவான பதத்தைப் பயன்படுத்துங்கள்; ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

பிரிட்­ட­னி­லுள்ள உலகப் புகழ்­பெற்ற பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஒன்­றான ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மாண­வ­ மா­ண­விகள் He (அவன்), She (அவள்) போன்ற பதங்­க­ளுக்குப் பதி­லாக Ze எனும் பொது­வான பதத்தைப் பயன்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

பாலின மாற்றம் செய்­த­வர்­களின் மனதைப் புண்­ப­டுத்­து­வதைத் தவிர்ப்­பதே இதன் நோக்­கமாம். ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் ஒன்­றி­யத்தால் வெளி­யி­டப்­பட்ட பிர­சு­ர­மொன்றில் இவ்­ வி­டயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரைகள் மற்றும் கருத்­த­ரங்­கு­க­ளிலும் இப் ­பதம் பயன்­ப­டுத்­தப்­படும் என தான் நம்­பு­வ­தாக ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.

1096 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்­கப்­பட்ட ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழகம் உலகில் தொடர்ந்து இயங்­கி­வரும் இரண்­டா­வது மிகப் பழை­­மை­யான பல்­க­லைக்­க­ழ­க­மாக விளங்­கு­கின்­ற­மை குறிப்­பி­டத்­தக்­கது.
பீட்டர் டெட்செல்

ஓரின சேர்க்­கை­யா­ளர்கள், பாலின மாற்றம் செய்­த­வர்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல்­கொ­டுக்கும் பீட்டர் டெட்செல் கருத்துத் தெரி­விக்­கையில், பாலின பிரி­வு கள் மற்றும் தடை­களை எல்லா வேளை­க­ளிலும் வலி­யுறுத்­தாமல் இருப்­பது சாத­க­மான விடயம் எனக் கூறி­யுள்ளார்.


இத்­த­கைய பொதுப்பால் பதங்­களை விரும்­பு­வோ­ருக்­காக இத்­த­கைய பதங்­களை பயன்­ப­டுத்­து­வது நல்­லது. ஆனால், இது கட்­டா­ய­மா­ன­தல்ல எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, பிரிட்­டனின் மற்றொரு, உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இது போன்ற அணுகுமுறையை பின்பற்று வதற்குத் தயாராகுவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எப்படி உச்சரிப்பது?


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக