அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 16 ஜனவரி, 2017

சிறையில் அடைக்கப்பட்டிருந்த காதலனை சூட்கேஸுக்குள் வைத்து கடத்த முயன்ற காதலி

சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த தனது காத­லனை சூட் கேஸ் ஒன்­றுக்குள் வைத்து கடத்திச் செல்ல யுவதி ஒருவர் மேற்­கொண்ட முயற்­சியை வெனி­சூலா அதி­கா­ரிகள் முறி­ய­டித்­துள்­ளனர்.



 Ibrain Jose Vargas Garcia & Antonieta Robles Saouda

வெனி­சூ­லாவின் ஜோஸ் அன்­டா­னியோ அன்­ஸோ­டெகுய் (Jose Antonio Anzoategui prison, Venezuela) எனும் சிறைச்­சா­லையில் இப்ரெய்ன் ஜோஸ் வேர்காஸ் கார்­சியா (Ibrain Jose Vargas Garcia) என்­பவர் அடைக்­கப்­பட்­டுள்ளார்.

வாகனம் ஒன்றை திரு­டிய குற்­றச்­சாட்டில் அவ­ருக்கு 9 வருட கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் இப்ரெய்ன் ஜோஸ் வேர்காஸ் கார்­சி­யாவை  பார்­வை­யி­டு­வ­தற்­காக அவரின் காதலி அன்­டோ­னி­யேட்டா ரொப்லெஸ் சௌடா (Antonieta Robles Saouda), மேற்­படி சிறைச்­சா­லைக்குச் சென்றார். தன்­னுடன் 6 வய­தான மக­ளை யும் அன்­டோ­னி­யேட்டா அழைத்துச் சென்­றி­ருந்தார்.

சிறை­யி­லி­ருந்து வெளியே வரும்­போது சக்­க­ரங்கள் பொருத்­தப்­பட்ட சூட்கேஸ் ஒன்றை இழுத்துச் செல்­வ­தற்கு அன்­டோ­னி­யேட்டா சிர­மப்­ப­டு­வதை அவ­தா­னித்­த­போது அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தேகம் ஏற்­பட்­டது.

அதனால், அந்த சூட்­கேஸை அதி­கா­ரிகள் சோத­னைக்­குட்­ப­டுத்­தினர்.

அப்­போது, கைதி­யான இப்ரெய்ன் ஜோஸ் வேர்காஸ் கார்­சியா சூட்­கே­ஸுக்குள் இருப்­பதைப் பார்த்து சிறை அதி­கா­ரிகள் திடுக்­கிட்­டனர்.

அதன்பின் கார்­சி­யாவின் காத­லி­யான அன்­டோ­னி­யேட்­டா­வையும் அதி­கா­ரிகள் கைது செய்­தனர். கார்­சியா மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

அன்டோனியேட்டாவுடன் வந்த சிறுமியை வெனிசூலாவின் சிறுவர் பராமரிப்பு அதிகார சபையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக