பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலி, தற்போது பல நாடுகளில் அனைத்து எஸ்.எம்.எஸ். செயலிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. மொபைல் போனில் மட்டுமின்றி, பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இந்த செயலி இயங்குகிறது.
வாட்ஸ் அப் செயலியை பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்த, அதற்கான புரோகிராமினை, இணையத்தில் இருந்து (https://www.whatsapp.com/download/) தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும்.
அதற்கு முன்னர், உங்கள் போனில், வாட்ஸ் அப் செயலி பதிக்கப்பட்டு இயக்கத்தில் இருக்க வேண்டும்.
ஏனென்றால், பெர்சனல் கம்ப்யூட்டரில், வாட்ஸ் அப் செயலி, தனிப்பட்ட செயலியாக இயங்காது.
உங்கள் மொபைல் போனில் உள்ள, வாட்ஸ் அப் புரோகிராமின் எக்ஸ்டன்ஷன் புரோகிராமாகத்தான் இயங்கும்.
எனவே, பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து பின்னர் அதனை இயக்கவும்.
அங்கு ஒரு க்யூ.ஆர். குறியீடு கட்டமாகக் காட்டப்படும்.
இப்போது, மொபைல் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியை இயக்கி, அதன் விண்டோவில், வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளில் தட்டி, மெனுவினைப் பெறவும்.
மெனுவில் WhatsApp web என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது, மொபைல் போனில் உள்ள கேமரா மூலம், கம்ப்யூட்டரில் உள்ள க்யூ. ஆர். குறியீட்டினை ஸ்கேன் செய்திடவும்.
சரியாக ஸ்கேன் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரும், வாட்ஸ் அப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போனும் இணையாகிவிடும்.
இனி, நீங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தாலாம்.
ஆனால், அந்நேரத்தில், உங்கள் ஸ்மார்ட் போன், இணைய இணைப்பில் வாட்ஸ் அப் இயக்கப்பட்டு, கம்ப்யூட்டர் அருகேயே இருக்க வேண்டும்.
ஆனால், போனில் மூலம் மேற்கொள்ளும் ஒலி மற்றும் விடியோ அழைப்புகளை, கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் வசதி இன்னும் தரப்படவில்லை.
ஒரு நாளில் அதுவும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக