அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 8 பிப்ரவரி, 2017

ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ்!

மொஸில்லா ஃபயர்பாக்ஸ் நிறுவனத்தினர் தற்போது வெளியிட்டுள்ள புதிய புரௌசர் ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ். இந்த புரௌசர் ஐபோன் பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால், அது மிகையாகாது.



இதில் விளம்பரங்களைத் தானாகவே பிளாக் செய்யும் ஆப்சன், புரௌசர் ஹிஸ்ட்ரியை அவ்வப்போது தானாகவே டெலிட் செய்யும் ஆப்சன், அதேபோல் அவ்வப்போது குக்கியை க்ளியர் செய்யும் ஆப்சன் ஆகியவை உள்ளன.

நாம் பயன்படுத்தும் பல்வேறு புரௌசர்களில் நமக்கு அதிகபட்ச எரிச்சலை தருவது விளம்பரங்கள்தாம். இந்த தொல்லையில் இருந்து விடுபடத்தான் தற்போது வெளிவந்துள்ளது மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் புரௌசர்.

இதில் உள்ள முக்கிய அம்சமே விளம்பரங்களை பிளாக் செய்யும் டிராக்கர் சாப்ட்வேர் தான். இந்த சாப்ட்வேர் விளம்பர நிறுவனங்கள் நம்முடைய ஐபியை டிராக் செய்யாமல் தடுப்பதால் நாம் ஏற்கனவே பார்த்த விளம்பரங்கள் தொடர்ந்து நம்மை தொல்லைப் படுத்தாது. அதுமட்டுமின்றி, எளிமையான எளிதில் லோட் ஆகும் தன்மை இருப்பதால் நாம் விரும்பும் பக்கத்தை உடனே திரையில் பார்க்க முடியும்.

பயன்படுத்துபவர்களுக்கு எளிமையானது, டேட்டா அதிக செலவில்லாமல் லோட் ஆகும் தன்மை, பிரவைசி பாதுகாக்கப்படுவது, ஆன்லைன் தாக்குதலை எதிர்க்க பவர்புல் சாஃப்ட்வேர் ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன.

இந்த மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் பிரௌசரை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த புரௌசர் ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு மாடலுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக