அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 12 ஏப்ரல், 2017

மொபைல் பித்தர்களுக்கு தரை விளக்கு

நெதர்லாந்திலுள்ள, போடேகிரேவன் என்ற சிறுநகரில், நடைபாதைகளில், ஸ்மார்ட்போன் திரையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே நடந்து செல்வோர் அதிகரித்துள்ளனர்.



பாதசாரிகள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் நிலைத் தகவல்களை வாசிக்கும் சுவாரசியத்தில், சாலையை கடந்தால் விபத்துகள் நடக்கும் என்பதால், அந்நகர கவுன்சில் ஒரு புதிய உத்தியை பரிசோதித்து வருகிறது. கையிலுள்ள மொபைல் திரையை குனிந்து பார்ப்பவர்கள், சாலை சமிக்ஞை விளக்குகளை நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள்.

எனவே, நடைபாதையின் மேலேயே பச்சை, சிவப்பு, ஆரஞ்சு விளக்குகளை நீள வடிவில் பதித்துள்ளது போடேகிரேவன் நகராட்சி.

இதே போல ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், ஜெர்மனியின் மியூனிச் ஆகிய நகர்களிலும் பரிசோதனைகள் நடக்கின்றன. எனவே, விரைவில் உலகின் பல நகர்களில், நடைபாதையில் சமிக்ஞை விளக்குகள் முளைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக