அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 3 ஏப்ரல், 2017

யாழில் இரக்கமற்ற, படிப்பறிவில்லாத ரவுடிகள் செய்த செயலை பாருங்கள்!! (படங்கள், வீடியோ)

நல்லுார் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற கள்வன் அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைத்தவர்களாம்.



இன்று அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த கள்வன் பிடிக்கப்பட்டான்.

இவனுடன் வந்த இன்னொருவன் ஓடித்தப்பிய நிலையில் இன்று காலை இவனது மனைவி இவனை இளைஞர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றதாகத் தெரியவருகின்றது. தற்போது இவன் அங்கு வந்த பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

இம்மனிதனை படுமோசமாக அடித்தவர்கள் புனிதர்களா??

பாருங்கள்! எப்படி ஒரு மனிதனை அடித்திருக்கிறார்கள் என்பதை…. இவர்கள் ஒரு நாகரீகம் அடைந்த சமுதாயத்தில் வாழும் மனிதர்களா?? மனிதாபிமானம் எங்கு இருக்கிறது??


இந்தமாதரியான கொடூர செயல் செய்தவர்களை முதலில் கைதுசெய்து ஜெயிலில் அடைக்கவேண்டும்.

1. யாழ்பாணத்தில் வாளோடு திரிபவர்கள் யாரையாவது இவர்கள் பிடித்து இப்படி அடிப்பார்களா??

2. வீடு புகுந்து பல இலட்சம் கொள்ளையடிப்பவர்களை யாரையாவது இவாகள் பிடித்திருக்கிறார்களா??

3. கிலோக்கணக்கில் கஞ்சா கடத்துபவர்கள் யாரையாவது இவாகள் பிடித்து அடிப்பார்களா???



இலக்கியா இணையம்

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக