அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டக்கூடாது... இதுதான் சத்யராஜ் மன்னிப்பு ஸ்டைல்!

சென்னை: 9 ஆண்டுகளுக்கு முன்பு கன்னட மக்களுக்கு எதிராகப் பேசியதற்காக ஒருவழியாக இன்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார் சத்யராஜ். ஆனால் அவர் மன்னிப்புக் கேட்டிருக்கும் விதம், 'பாகுபலி 2 படத்துக்காக வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்கிறேன். இந்தப் படம் ரிலீசானாப் போதும்... அதுக்கப்புறமும் தொடர்ந்து தமிழர் - கன்னடப் பிரச்சினை வரும்போது மேலும் தாக்கிப் பேசுவேன்,' என்ற தொணியில்தான் அமைந்திருக்கிறது.



இது இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமா அல்லது எரிகிற கொள்ளியில் பெட்ரோல் ஊற்றியது போலாகுமா என்பது இன்றும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும்.

சிம்பிளாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் அல்லது மன்னிப்புக் கோருகிறேன் என்றால், தமிழர்கள் வெளுத்து எடுப்பார்களே என்பதை மனதில் கொண்டு, தனது அறிக்கையை வாசிக்கும்போது ஒருவித நக்கலுடன்தான் வாசித்துள்ளார் சத்யராஜ்.

அதாவது மன்னிப்புக் கேட்ட மாதிரியும் இருக்கணும்... தமிழர்கள் மத்தியில் ஹீரோ மாதிரியும் தெரியணும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் வாசிக்கப்பட்ட மன்னிப்பு அறிக்கை இது.

"எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கும், என் நலம் விரும்புபவர்களுக்கும் என்மீது வருத்தம் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் ஒரு மிகச்சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனுடைய செயலின் பொருட்டு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும், பணமும் விரயம் ஆவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமில்லாது, கர்நாடகா மாநிலத்திற்கு 'பாகுபலி-2' ஆம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..." - இது சத்யராஜ் மன்னிப்பு அறிக்கையின் ஒரு பகுதி.

தான் நடித்த ஒரு படம் பிரச்சினையின்றி வெளியாக வேண்டும் என்ற அழுத்தம் காரணமாகவே மன்னிப்பு கேட்டுள்ளார். இதில் தமிழ், தமிழன், வீரம், உரிமை... என எந்த வெங்காயமும் இல்லை. எல்லாமே காணாமல் போய்விடுகிறது.

ஆக, ஒரு படம் வெளியாக வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக அவர் கேட்டுள்ள மன்னிப்பு இது. இதை கன்னட வட்டாள் நாகராஜ் ஏற்பாரா? அல்லது எதிர்ப்பு தொடருமா... பார்க்கலாம்.
  
Thatstamil


 சத்யராஜ் மன்னிப்பு காணொளி


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக