அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 24 ஏப்ரல், 2017

என்னை இப்படி அடக்கம் செய்யுங்கள்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம் வயதில் உயிரிழந்த பெண்ணுக்கு அவர் விருப்பபடியே அவர் குடும்பத்தார் அழகுப்படுத்தி இறுதி சடங்கு நடத்தியுள்ளனர்.



இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் ரேசின் ப்ரிகுண்டா Racine Pregunta (வயது 20) இவர் ஒரு மொடல் ஆவார்.

இவர் எலும்பு புற்று நோயினால் பாதிக்கப்பட்டு நோய் முற்றியதால் தான் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என அவர் உணர்ந்துள்ளார்.

இதையடுத்து அவர் தனது குடும்பத்தாரிடம் தான் இறக்கும் போது அழகாக இறக்க வேண்டும். தான் இறந்தபின் தன்னை அழகாக அலங்கரித்து, தான் விரும்பிய ஆடைகளை அணிவித்து தன்னை சவப்பெட்டியில் வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இவர், கடந்த 17ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவரின் விருப்ப படியே அவரை அவர் குடும்பத்தார் புதைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இப்பெண்ணின் சகோதரி தெரிவித்திருப்பதாவது, ‘Die Beautiful’ என்னும் ஆங்கில திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல் தான் இறக்கும் போது  தன்னை அழகாக்க வேண்டும் என என் சகோதரி எங்களிடம் தெரிவித்துள்ளார்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக