கான் திரைப்பட விழாவில் 15வது வருடமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்கிறார்.
இந்திய திரைப்பட நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெற்றுவரும் 70-ஆவது கான் திரைப்பட விழாவில் சின்ட்ரெல்லா ஆடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு இது.
சிலர் ஐஸ்வர்யாவை சின்ட்ரெல்லா என்றும்,. பார்பி டால் என்றும் சமூக வலைத்தளங்களில் புகழ் பாடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமிலும் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்த ஆடை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிரபல ஆடை வடிமைப்பாளர்களிலிருந்து அழகு கலைஞர்கள் வரை அனைவரும் ஐஸ்வர்யா ராயின் ஆடையை புகழ்ந்து பேசியுள்ளனர்.
ஐஸ்வர்யா ராய்
வயது குறித்து இன்ஸ்டாகிராமில், '' ஐஸ்வர்யா ராய்க்கு பத்து வயது குறைந்தது
போல் தோன்றவில்லையா ?'' என்று இந்திய பிரிவின் எல்லி நாளிதழ்
பதிவிட்டிருந்தது.
ஆடை வடிவமைப்பாளர் மைக்கெல் சின்கோ வடிவமைத்திருந்த சின்ட்ரெல்லா ஆடையை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்தார்.
2003ல் கான் திரைப்பட விழாவின் ஜூரி குழுவில் முதன்முதலாக இணைந்தார்.
கடந்தாண்டு கான்
திரைப்படவிழாவில் பர்ப்பிள் நிற உதட்டு சாயம் போட்டு வந்ததற்காக சமூக
வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
அனைவருக்கும் இந்தியா முறைப்படி வணக்கம் வைத்த பார்பி டால்
அவரது ஆடைய தாங்கிச் செல்ல ஐஸ்வர்யா ராய்க்கு பெரும் உதவி தேவைப்பட்டது.
ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் சின்ட்ரெல்லா உடையை பாராட்டியுள்ளார்.
BBC Tamil
Share |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக