மத்திய பிரதேசத்தில், ரயில் தண்டவாளம் அருகே, தாய் இறந்தது தெரியாமல், ஒரு வயது குழந்தை, பால் குடித்து கொண்டிருந்த காட்சி, பலரது நெஞ்சை உருக்கியுள்ளது.
பரபரப்பு
ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் போபால் அருகே, தாமோஹ் பகுதியில், ரயில் தண்டவாளம் அருகே, ஒரு பெண் இறந்து கிடப்பதையும், அருகே, ஒரு வயது குழந்தை, அழுதபடி, தாயிடம் பால் குடிப்பதையும், ரயில் டிரைவர் ஒருவர், நேற்று முன்தினம் பார்த்தார்.
இது பற்றி, ரயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.இதற்கிடையே, அங்கு வந்த பலர், இறந்த தாயிடம் குழந்தை பால் குடிக்கும் காட்சியை, மொபைல் போனில், 'வீடியோ' எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது, பலரின் மனதை உருக்கியதோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
விபரம் தெரியாது
சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகளும், போலீசாரும், பெண்ணின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; குழந்தையை, குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
இது குறித்து, போலீசார் கூறுகையில், 'இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, எந்த விபரமும் தெரியவில்லை. ரயிலில் பயணம் செய்யும் போது, அவர் தவறி விழுந்து, அடிபட்டு இறந்திருக்க வேண்டும்.
'விரைவில், அந்த பெண்ணின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து, தகவல் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தையையும் பாதுகாப்பாக ஒப்படைப்போம்' என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக