அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 6 ஜூன், 2017

பாகுபலி எல்லாம் ஒரு படமா, அதுக்கு ரூ. 10 கூட செலவளிக்க மாட்டேன்: பிரபல இயக்குனர்

பாகுபலி 2 எல்லாம் ஒரு படமா, அதற்காக நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என்று பிரபல மலையாளம் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

வசூலில் பல புதிய சாதனைகள் படைத்துள்ள படம் பாகுபலி 2.

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை கீது மோகன்தாஸ், நடிகர் ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கோபாலகிருஷ்ணன் பாகுபலி 2 படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். 1991ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான பாதாள பைரவி போன்று தான் பாகுபலி 2 என்றார் அவர்.

பாகுபலி 2 படத்தால் இந்திய சினிமா துறைக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற படங்களை பார்க்க நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த பாகுபலி 2 படத்தை பிரபல இயக்குனர் கடுமையாக விமர்சித்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக