அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 19 ஜூன், 2017

டுவிட்டரில் அதிக பாலோயர்களை வைத்துள்ள பிரபலம்

வலைத்தளமான டுவிட்டரில் உலகளவில் அதிக எண்ணிக்கையில் பாலோயர்களை அமெரிக்க பாடகியான கடி பெர்ரி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.



டுவிட்டர் வரலாற்றில் முதல் முதறையாக அமெரிக்க பாடகியான கடி பெர்ரி 100 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாடல்களை எழுதுவதுடன் பல பாடல்களை பாடி உலகம் முழுவதும் பிரபலமான பாடகர்களின் பட்டியலில் கடி பெர்ரி முதல் இடம் பிடித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், இசை துறையில் அதிகளவில் வருமானம் ஈட்டும் பாடகி என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

கடி பெர்ரி பாடிய ‘ரோர், போன் அப்பிடிட்’ உள்ளிட்ட பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலமானதாகும்.

2009-ம் ஆண்டு டுவிட்டரில் இணைந்த இவர் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பாலோயர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடி பெர்ரிக்கு அடுத்ததாக கனடா நாட்டை சேர்ந்த பாடகரான ஜஸ்டின் பீபர் இரண்டாது இடத்தில் இருக்கிறார்.

இவரை தொடர்ந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா மூன்றாது இடத்தில் இருக்கிறார்.

சர்வதேச அளவில் அரசியல் தலைவர்கள் வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதல் இடத்திலும், இந்திய பிரதமரான நரேந்திர மோடி இரண்டாது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக