அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 23 ஜூலை, 2017

நல்லுார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான உண்மை என்ன? சிறப்பு அறிக்கை

நல்லுாரில் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக் காரணம் தற்செயலாக நடந்ததாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.



நல்லுார் பின் வீதியில் உள்ள பழக்கடை வைத்திருக்கும் ஒருவனுக்கும் அவனது உறவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது மோட்டார் சைக்கிளில் அப்பகுதியால் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வழி மறித்து அவரது துப்பாக்கியைப் பறித்து குறித்த கடை வைத்திருப்பவனை சுடுவதற்கு முயன்ற போது ஏற்பட்ட கலவரமே பொலிஸ் மற்றும் நீதிபதி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காரணமாக உள்ளது என அப்பகுதியில் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில வேளை நீதிபதி அவர்களை வழி மறித்து சுட்டுக் கொல்வதற்கா திட்டமிட்டு குறித்த கலவரத்தை மேற் கொண்டிருக்கலாம் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த நேரில் பார்த்தவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கான துப்பாக்கி பொலிசாரிடம் இருந்தே பறிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. இவர் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் காயமேற்பட்ட மெய்பாதுகாவலர்களை பார்வையிட்டுள்ளார்.

தொடர்ந்தும் சிகிச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முதுகை துளைத்த குண்டு ஈரலையும் பிரதான நாளமான மேற்பெரு நாளத்தையும் சிதைத்துள்ளது என தெரியவருகின்றது.

இதுவரை எல்லா வைத்திய நிபுணர்களும் சிகிச்சையில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை ஓட்டிய சாரதியின் தகவல்கள் இதோ..

எமக்கு முன்னால் மெய்பாதுகாவலரான கேமசந்திர (வயது 51 ) மோட்டார் வண்டியில் பாதுகாப்பிற்காக சென்று கொண்டிருந்தார், வண்டியினுள் நானும் ஐயாவும் மற்றய பாதுகாவலரான விமலசிறி ( வயது 51) இருந்தோம்.

நல்லூர் பின்வீதியை ஆண்மித்த வேளை எமக்கு முன் சென்ற கேமசந்திர உடன் ஒருவர் முரண்படுவது போல தோன்றியது.இதை அவதானித்த ஐயா வண்டியை நிறுத்துமாறு கட்டளையிட்டார்.

நானும் ஓரமாக வண்டியை நிறுத்த முதல் கேமசந்திர உடன் முரன்பட்டவர் அவரது துப்பாக்கியை பறித்து முதுகு வயிற்று பக்கமாக சுட்டார்.இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

வண்டியை நான் நிறுத்துவதற்குள் அருகிலிருந்த பொலிசாரும் ஐயாவும் அவனை நோக்கி ஓடினர்.இதன்போது விமலசிறி அவான்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.அவன் பதிலுக்கு சுட்டதில் வீமலசிறிக்கு கையில் சூடு பட்டது.

விபரீதத்தை உணர்ந்த நான் உடனடியாக ஐயாவின் உதவியோடு காயம்பட்ட இருவரையும் தூக்கி வண்டியில் போட்டு வைத்தியசாலை வந்தேன்.வரும்போது அவன் துப்பாக்கியை எறிந்துவிட்டு நொண்டி நொண்டி போவதை அவதானித்தேன் என்றார்.

தற்போது சத்திரசிகிச்சைகள் முடிவுற்று கேமசந்திர அதீதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

இதே வேளை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவன் மது போதையில் இருந்ததாகவும் அவன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அப்பகுதியால் வ்ந்து கொண்டிருந்த வயோதிப தம்பதிகளின் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அதில் தப்பி ஓடியதாகவும் அப்பகுதியில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக