ஃபேஸ்புக் ஒருவரின் வாழ்வில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பலருக்கு கேள்வி எழுப்பலாம். இது மட்டுமல்ல, கொலை, கொள்ளை, குடும்ப பிரச்சனைகளுக்கும் ஃபேஸ்புக் ஒரு காரணமாக அமைகிறது. இதோ! நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்...
நீங்கள் கால் செய்யும் போது உங்கள் துணை ஏதனும் மீட்டிங்கில் இருந்திருக்கலாம். இண்டர்நெட் ஆனில் இருந்து மொபைல் சைலன்ட் மோடில் இருந்திருந்தால் கூட, கால் வருவது தெரியாது ஆனால், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பது போன்று தான் தெரியும். எனவே, கண்டதை யோசித்து சந்தேகிக்காமல் கொஞ்சம் ஜோசிங்க!
எனவே, ஃபில்டர் முகங்களை நம்பி, ஃபில்டர் இல்லாத அகம் கொண்ட, உங்களுக்கு என்றும் நேர்மையாக இருக்கும் உங்கள் துனையை இழந்துவிட வேண்டாம்.
Thatstamil
ஒப்பீடுகள்!
அனைவரும் ஷாரூக்கான் போலவோ, இதயம் முரளி போலவோ காதலிக்க மாட்டார்கள். ஒருவரின் காதல் கோபத்தில் வெளிப்படும், ஒருவரின் காதல் கேலி, கிண்டலில் வெளிப்படும். இன்றைய காதல் ஜோடிகள்... தங்கள் காதலை நேரில் காண்பிப்பதை காட்டிலும்... ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களில் தான் வெளிபடுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் போடும் ஸ்டேட்டஸ் உடன் ஒப்பிட்டால் அவர்களது காதல் கொஞ்சம் குறைவாக தான் இருக்கும். கூகுள் செய்து ஒரு நல்ல ஸ்டேட்டஸ் காபி, பேஸ்ட் செய்து போட்டுவிடுவார்கள்.கரும்புள்ளி!
ஆனால், மற்றவர் பதிவிடுவதை போல என் கணவன் / துணை என மனைவியோ, கணவனோ மனம் வருந்துகிறார்கள். இதுதான் தவறே. நாம் அனைவரும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. ஏன் நமது கைவிரல்கள் ஐந்தும் ஒரே மாதிரியா இருக்கின்றன. சமூக ஊடகம் என்பது ஒரு மாயை. அந்த மாய உலகில் நடக்கும் செயல்களை தங்கள் வாழ்வோடு ஒப்பிட்டுக் கொள்வது. தான் விரும்பாது போல ஸ்டேட்டஸ் போடும் நபருடன் நேசம் வளர்த்துக் கொள்வது எல்லாம் சிறிய புள்ளியாக துவங்கி, உறவில் கரும்புள்ளியாக மாறிவிடும்.ஷேர் பண்ணாதீங்க!
ஷேர் செய்தால் துக்கம் குறையும், மகிழ்ச்சி பெருகும் என்பார்கள். ஆனால், அதை நேரடியாக ஒரு நபருடன் செய்துக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கில் அல்ல. உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி, உங்கள் காதலை காதலியிடம் தெரிவித்துவிட்டீர்கள். அல்லது சோகமான நிகழ்வு நடந்துவிட்டது, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் கொஞ்சம் தேவலாம் போல இருக்கிறது என்று உணர்கிறீர்கள்.. இதை யாரிடம் பகிர்வீர்கள்...?யாரிடம் பகிர்வீர்கள்?
நிச்சயம் இந்த உணர்வுகளை சாலையில் நடந்து செல்லும் போது எதிரே வருவோரிடமோ, சாலை ஓரத்தில் காய்கறி விருக்கும் நபரிடமோ நாம் பகிர்ந்துக் கொள்ள மாட்டோம் அல்லவா? நிச்சயம் நமக்கு நெருக்கமான உறவுகள், நண்பர்களிடம் தானே பகிர்ந்துக் கொள்வோம். பிறகு ஏன், உங்க பர்சனல் விஷயங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துக் கொள்கிறீர்கள். அங்கே உங்களுக்கு தெரிந்தவர்களை விட தெரியாதவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.தெருவில் போஸ்ட்டர் ஒட்ட வேண்டாம்!
உங்கள் கணவன் / காதலன் உடன் சண்டை என்றால் உடனே சோகமான ஸ்டேட்டஸ் போடுவது, பர்சனல் உணர்வுகளை இந்த பெண்களே இப்படி தான், ஆண்களே அப்படி தான் என்று மறைமுகமாக சாடைமாடையாக பேசுவது எல்லாம் நேரடியாக நீங்கள் யாரை குறிப்பிட்டு கூறுகிறீர்கள் என்பதை அனைவராலும் அறியமுடியும். இதெல்லாம் உங்க அந்தரங்கள் டைரியின் பக்கங்களை போஸ்ட்டர் அடித்து தெருக்களில் ஒட்டுவதற்கு சமம். எனவே, முடிந்த வரை பர்சனல் விஷயங்களை சமூக தளங்களில் ஷேர் செய்ய வேண்டாம்.சந்தேக குணம்!
இப்போது இந்த தலைமுறை தம்பதிகள் மத்தியில் வளர்ந்து வரும் முட்டாள்தனமான காரியம் என்ன தெரியுமா? ஒருவர் கால் செய்து மற்றவர் அழைப்பை எடுக்கவில்லை என்றால் உடனே ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் செயலிகளில் அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா என்று போய் நோட்டம்விடுவது. ஒருவேளை அவர்கள் ஆன்லைனின் இருந்தால்... தனது காலை எடுப்பதை காட்டிலும், அங்கே என்ன வேலை இருக்கிறது? ஒருவேளை வேறு பெண்ணுடன் / ஆணுடன் பேசிக் கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகப்பட துவங்கிவிடுகிறார்கள்.கொஞ்சம் யோசிங்க!
இன்றைக்கு பலரும் சமூக தள செயலிகளை மொபைல்களில் தான் அதிகம் பயனப்டுத்துகிறார்கள். உங்கள் அழைப்பு வந்தால் நிச்சயம் அவர்களுக்கு தெரியும், அழைப்பை கட் செய்துவிட்டோம், கட் ஆகும் வரை காத்திருந்தோ துணையை ஏமாற்ற நினைப்பவன் அடிமுட்டாளாக தான் இருப்பார்.நீங்கள் கால் செய்யும் போது உங்கள் துணை ஏதனும் மீட்டிங்கில் இருந்திருக்கலாம். இண்டர்நெட் ஆனில் இருந்து மொபைல் சைலன்ட் மோடில் இருந்திருந்தால் கூட, கால் வருவது தெரியாது ஆனால், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பது போன்று தான் தெரியும். எனவே, கண்டதை யோசித்து சந்தேகிக்காமல் கொஞ்சம் ஜோசிங்க!
சிறுவயது ஆசைகள்!
இல்லறம் நன்றாக தான் சென்றுக் கொண்டிருக்கும். எப்போதோ பள்ளிப்பருவத்தில் ஆசையாக கண்ட நபர் ஃபேஸ்புக்கில் இருப்பது தெரியவரும். அல்லது அவர் உங்களுக்கு ரெக்வஸ்ட் அனுப்பியிருப்பார். உடனே அவர் மீது அந்த பழைய ஆசைகளை தூசித்தட்டி தூவி விடுவது எல்லாம் வேண்டாத வேலை. உங்களுக்கென ஒரு துணை இருக்கிறார். வெறும் நட்பாக தான் பழகுவேன் என்று இப்படியாக துவங்கும் பல உறவுகள் பெரும்பாலும் இல்லறத்திற்கு உலைவைக்கும் உறவாக தான் முடிகிறது என்று ஆய்வறிக்கைகளே கூறுகின்றன.உறக்கம் மட்டுமல்ல, உறவும் தான்...
படுக்கை அறைக்குள் சென்ற பிறகு தயவு செய்து ஃபேஸ்புக் நோண்ட வேண்டாம். இது உறக்கத்தை மட்டுமல்ல, உறவுகளையும் கெடுக்கும். தன்னைவிட அந்த ஃபேஸ்புக்கில் என்ன பெரிய ஈர்ப்பு என்று உங்கள் துணைக்கு உங்கள் மீது சிறிய கோபம் ஏற்படலாம். இதுவே நாள் முழுக்க தொடர்ந்தால், ஒருநாள் எரிமலையாக வெடிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, தயவு செய்து உங்கள் தனிப்பட்ட அந்தரங்க வேளைகளில் சமூக தள செயலிகளை மூக்கை நுழைக்க அனுமதிக்க வேண்டாம்.ஃபில்டர் முகங்களை நம்ப வேண்டாம்!
ஆண், பெண் என்ற பேதமின்றி ஃபேஸ்புக்கில் பதிவாகும் 90% முகப்பு புகைப்படங்கள் ஃபில்டர்களுடன் பதிவாகின்றன. போதாகுறைக்கு ஃபில்டர் ஆப்ஷனை ஃபேஸ்புக்கே கொடுக்கிறது. நீங்கள் கவர்ச்சியாக காணும் ஒரு நபர் உண்மையில் அவ்வளவு கவர்ச்சியுடன் இருக்க மாட்டார். அவரது முகத்தில் அந்த பளீச் இருக்காது. அவர் முகத்திலும் பள்ளம், மேடுகள், கண்ணுக்கு கீழ் கருமை, பொலிவிழந்த நிலை இருக்கலாம்.எனவே, ஃபில்டர் முகங்களை நம்பி, ஃபில்டர் இல்லாத அகம் கொண்ட, உங்களுக்கு என்றும் நேர்மையாக இருக்கும் உங்கள் துனையை இழந்துவிட வேண்டாம்.
Thatstamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக