அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 7 மே, 2018

உயரமான ஹீல்ஸ் அணிந்த அம்மாவால் இறந்த குழந்தை

மஹாராஷ்டிராவில் இருக்கும் தானேவில் ஹீல்ஸ் செருப்பு ஒன்று 6 மாத குழந்தையின் உயிரை பறித்து இருக்கிறது. உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடக்கும் போது தவறி விழுந்த ஃபெமிதா ஷேக் என்ற பெண்ணின் குழந்தை மரணம் அடைந்துள்ளது.



 Tragedy: Mohammed Shaikh's parents had been attending a wedding at this Marriage Hall in Kalyan, near Mumbai, India, when the accident took place

ஃபெமிதா ஷேக் என்ற 23 வயது பெண் மஹாராஷ்டிராவில் உள்ள தானேவில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள தனது 6 மாத கை குழந்தையுடன் சென்றுள்ளார். ஃபெமிதா மிகவும் பெரிய ஹீல்ஸ் உள்ள செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதில் ஃபெமிதா திருமண மண்டபத்தின் முதல் மாடியில் நடந்து பேசிக்கொண்டு இருந்த போது தவறி விழுந்துள்ளார். ஹீல்ஸ் செருப்பு தடுக்கி நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். அவர் மாடியில் இருந்து விழும் போது அவர் கையில், அவரது 6 மாத குழந்தையும் இருந்துள்ளது.

மாடியில் இருந்து விழுந்த ஃபெமிதாவிற்கு தலையில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த 6 மாத குழந்தைக்கு தலையில் மிகவும் பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளது.

இரண்டு பேரையும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அந்த குழந்தை மரணம் அடைந்துள்ளது. இதனால் ஃபெமிதா தற்போது மோசமான மனநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக