சொல்லும் வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்யும் கூகுள் ஹோம் இப்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டது. அது என்ன கூகுள் ஹோம்? அது எப்படி செயல்படும்?
அமேசான் நிறுவனத்தின்– அமேசான் எக்கோ ஸ்பீக்கருக்குப் போட்டியாக, கூகுள் களமிறக்கியிருப்பதுதான் இந்த கூகுள் ஹோம் (ஸ்பீக்கர்). இதில் கூகுள் அசிஸ்டெண்டையும் இணைத்திருப்பதுதான் இதன் ஹைலைட்!
இந்த கூகுள் ஹோம் கணினி சமாச்சாரங்களுடன் கூடிய ஓர் ஒலிபெருக்கி. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் அசிஸ்டெண்ட் என்பது கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுடன் நம்முடன் உரையாடக்கூடிய நவீன ஆப் வசதி. இணையத்தில் உள்ள தகவல்களை நம் கட்டளைக்கேற்பப் பயன்படுத்தி நம் பணிகளை இட்ட நேரத்தில் செய்து முடிக்கும் வல்லமைபெற்றது இது.
ஓர் உதாரணம்……. மும்பையில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். இதற்காக நீங்கள் நேரிலோ அல்லது இணையத்திற்கோ சென்று விமான டிக்கெட்டை பதிவுசெய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் டிக்கெட் வாங்க வேண்டும் அல்லது அங்கிருக்கும் நண்பர்கள் யாரேனும் உதவிக்கு கூப்பிட வேண்டும்.
இதை நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்துகொண்டு, யார் அங்கே….. நாளை நான் மும்பையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். விமான டிக்கெட், நிகழ்ச்சிக்கான டிக்கெட் எடுத்துவை? என்று கட்டளையிட்டால் அதை அடுத்து சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுவது மட்டுமன்றி மும்பையில் நாளை வெயில் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உங்கள் உடலுக்கு அது ஒத்துக்கொள்ளாது. எனவே இளநீர், மோர் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. பிளைட் நம்பர் 747, புறப்படும் நேரம் காலை 10 மணி, இண்டர்நேஷனல் ஏர்போர்ட், மூன்றாவது கேட் என்று நாம் இட்ட கட்டளையை செய்து முடித்துவிட்டு நாம் கேட்காத ஆனாலும் நமக்கு உபயோகமான தகவல்களைத் தந்து அசத்துவதுதான் இந்த கூகுள் அசிஸ்டென்ட்!
இதற்காக கூகுள் ஹோமை வாங்கியதும் நம் ஆண்ட்ராய்டு மொபைலில் இதற்கென உள்ள பிரத்தியேக ஆப்ஸை டவுன்லோட் செய்து இணைப்பதன் மூலம் மொபைல் மூலமும் இதற்கு கட்டளைகளைத் தரமுடியும்.
2016 இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கூகுள் ஹோம், அங்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி அறிமுகப்படுத்தியது கூகுள் நிறுவனம். தற்போது இந்தியாவில் ஒரு கூகுள் ஹோமில் விலை ரூபா 9999. கூகுள் மினி ஹோமின் விலை ரூபா 4499.
கூகுள் ஹோம் என்பது கூகுள் நவ் என்ற செயலியின் மேம்படுத்தப்பட்ட உருவம். கூகுள் நவ் செயலியில் நமது குரலைகேட்டு கேட்ட தகவல்களைத் திரையில் கொடுக்கும். பதில் ஏதும் தராது. ஆனால் கூகுள் ஹோம், ஓகே கூகுள்……. இன்னைக்கு எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் போகலாம் என்று இருக்கேன். என் மனைவி, மகன் என மூன்று பேரும் போகலாம் என்று இருக்கோம். சென்னையில் எந்தெந்த தியேட்டரில் ஓடுது? எத்தனை மணிக்காட்சி? டிக்கெட் எந்தெந்த திரையரங்கில் இருக்கு. சொல்லு? என்று கேட்டால் அடுத்த சில வினாடிகளில் அண்ணாசாலையில் உள்ள தேவிபாரடைஸ், கோயம்பேட்டில் உள்ள ரோகிணி, புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி தியேட்டர்களில் நாடோடி மன்னன் திரையிடப்படுகிறது. ரோகிணி, அபிராமியில் டிக்கெட் இல்லை. தேவி பாரடைஸில் முப்பது டிக்கெட்டுக்கள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த பின்வரிசையிலும் மூன்று இடங்கள் இருக்கின்றன என்று இணையத்தில் உள்ள தகவல்களை ஆராய்ந்து பதில் சொல்லிவிடும். ஓகே கூகுள் உடனே அதன் மூன்று டிக்கெட்டுக்களையும் புக் பண்ணிடு என்று கட்டளையிட்டால் போதும் டிக்கெட் புக் பண்ணியாச்சு. மதியம் 3 மணிக்குப் படம் தொடங்கும். நீங்க இன்னும் 30 நிமிடங்களில் கிளம்பினால் அண்ணாசாலையில் உள்ள டிராப்பிக்கை கடந்து நேரத்திற்கு செல்ல முடியும் என்று பதில் அளிக்கும்.
கூகுள் ஹோமை நம் ஆண்ட்ராய்ட் போனுடன் இணைத்து வீட்டில் உள்ள LED டிவியை குரோம்காஸ்ட் எனும் இணையவசதி கருவி கொண்டு இணைத்துக்கொள்ள வேண்டும். வீட்டிலுள்ள ஃபேன், டியூப்லைட், வாஷிங்மெஷின் போன்றவற்றையும் கூகுள் ஹோமுடன் இணைத்துவிட வேண்டும்.
எல்லாம் இணைத்து விட்ட பிறகு, ஓகே கூகுள் எனக்கு ரொம்ப போரடிக்குது இளையராஜா பாட்டு, “என்ன சத்தம் இந்த நேரம்….” வேணும். பிளே பண்ணேன் என்று கேட்டால் உடனே அந்தப் பாட்டு கூகுள் ஹோமில் ஒலிக்கும். டிவியில் பார்க்க வேண்டுமென்றால் யுடியூப்பில் அதுவாகவே எடுத்துத்தரும்.
உங்கள் மனநிலையைப் புரிந்துகொண்டு உங்களுக்குப் பதில் அளிக்கும். குழந்தைகளுக்குக் கதை சொல் என்றால் கதை சொல்லும். கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியின் அகராதியிலிருந்து சொல்லைத் தேடிக்கொடு என்றால் தேடிக்கொடுக்கும்.
கீரையை கிள்ளி வைங்க. 50 கிராம் தனியா எடுத்துக்கோங்க. காய்ந்த மிளகாய் 15 எடுத்துக்கோங்க என்று படிப்படியாக சமையல் செய்ய உதவி செய்யும்.
கூகுள் அசிஸ்டெண்ட் இதுபோல 7000 ஆயிரம் கோடி தகவல்களை உள்ளடக்கியுள்ளது. எது குறித்தும் கேள்வி கேட்கலாம். உடனே பதில் தரும் என்கிறது கூகுள்.
கூகுள் ஹோம் ஸ்பீக்கருக்குத் தேவை. அதற்கு உயிரூட்ட கொஞ்சம் மின்சாரமும் அதற்கு உணர்வூட்ட வைஃபை அடங்கிய இணைய இணைப்பும்தான். மின்சாரம் இல்லையெனில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் இருக்கும் வரையிலான வசதியும் இதில் உண்டு.
ஃபோனை நிறுத்து. லைட்டை ஆப் பண்ணிடு. காலையில் 5 மணிக்கு என்னை எம்.எஸ்.சுப்புலட்சுமி சுப்ரபாதத்தோடு எழுப்பு என்று சொல்லிவிட்டுப் படுத்தால் போதும், அனைத்தையும் கூகுள் ஹோம் செய்து முடித்துவிடும். சரி எல்லோருடைய கட்டளைகளையும் ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ளாது. யாருடைய குரல்களுக்கு எல்லாம் அது பதில் சொல்ல வேண்டுமோ? அவர்களது குரலை பதிவுசெய்ய வேண்டும். அவரவர் குரல்களை அடையாளம் கண்டு பதில் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றும்.
ஃபேன், லைட் எல்லாம் எப்படி ஆஃப் ஆகும்? இதற்காக பிலிப்ஸ் போன்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் இட்டிருக்கிறார்கள். வரும் காலத்தில் வைஃபை மூலம் அனைத்து ஹோம் அப்ளையன்ஸ் பொருட்களும் இயங்கும் வகையில் வந்துவிடும். அப்போது உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் கட்டுப்படுத்தலாம். இன்னும் பல்வேறு வசதிகள் வருங்காலத்தில் அப்டேட் செய்யப்படும் என்றும் சொல்லியுள்ளது கூகுள்.
தற்போது ஆங்கிலமொழியில் மட்டும் இயங்கும் இந்த கூகுள் ஹோம் விரைவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இயங்கும்படி செய்ய இருக்கிறது கூகுள் ஹோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக