அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 4 ஜூலை, 2018

வினோதமான குற்றச்சாட்டு

எங்கள் நாட்டுக்கு வரும் மேகக்கூட்டங்களை திருடிவிட்டனர், இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு



 Brigadier General Gholam Reza Jalali of Iran's Civil Defense Organization (Screen capture: YouTube)

எங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் வரும் மேகக் கூட்டங்கள் மழை பொழியாமல் இருக்க சதி செய்கின்றன என்று இஸ்ரேல் மீது ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் வினோதமான குற்றச்சட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஈரானில் பருவநிலை மாறிவருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தில் வெளிநாட்டின் தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஈரான் வான் எல்லைக்குள் வரும் மேகக் கூட்டங்கள் மழை பொழியாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வேலையை செய்கின்றன.

மேகம் மற்றும் பனி திருட்டு காரணமாக நாம் வறட்சியை எதிர்கொண்டிருக்கிறோம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக