அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 12 டிசம்பர், 2018

லதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்?: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்

இந்த புகைப்படம் குறித்த உண்மயை ரஜினிகாந்த் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் ரஜினி தனது மனைவி லதா மற்றும் பேரன்கள் யாத்ரா, லிங்காவுடன் சேர்ந்து தியேட்டரில் 2.0 படம் பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படங்களில் லதா ரஜினிகாந்தின் இருக்கைக்கு பின்னால் ஒரு பெண் நிற்கிறார். அந்த பெண் ரஜினி வீட்டு பணிப்பெண் என்றும் அவர் நின்று கொண்டே படம் பார்த்தார் என்றும் சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

தியேட்டரில் இருக்கை இருந்தும் பணிப்பெண்ணை நிற்க வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஜினியின் பிறந்தநாளான இன்று அந்த புகைப்படங்களை மீண்டும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விமர்சிக்கிறார்கள்.

அந்த பெண் யார், ஏன் அங்கு நிற்கிறார் என்று புகைப்படங்கள் குறித்து ரஜினி குடும்பத்தில் யாராவது விளக்கம் அளித்து இந்த தேவையில்லாத விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால் நன்றாக இருக்கும். இதற்கிடையே அவர் பணிப்பெண் தான் என்றும், தியேட்டரில் இருக்கைகள் இருந்தும் அவரை நிற்க வைத்தனர் என்றும் தமிழ் நடிகர் ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக