அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 5 ஜூலை, 2020

அன்ரோயிட் சாதனங்களில் SMS ஊடாக Location ஐ பகிர்வது எப்படி?

ஒருவர் தமது இருப்பிடத்தினையோ அல்லது வேறு ஒரு அமைவிடத்தினையோ மேப் ஊடாக பகிரக்கூடிய வசதி மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப், வைபர் மற்றும் பேஸ்புக் உட்பட பல அப்பிளிக்கேஷன்கள் ஊடாக இவ்வாறு அமைவிடங்களை மற்றையவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அவ்வாறே SMS ஊடாகவும் அன்ரோயிட் சாதனங்களில் அமைவிடங்களை பகிர்ந்துகொள்ளும் வசதி காணப்படுகின்றது.

முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து உங்கள் அன்ரோயிட் சாதனத்தில் மெசேஜ் அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும் (ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் தேவையில்லை).

நிறுவின பின்னர் குறித்த அப்பிளிக்கேஷன் கேட்கும் அம்சங்களிற்கு அனுமதி கொடுக்கவும்.

அதன் பின்னர் Start Chat பொத்தானை கிளிக் செய்யவும்.

தொடர்ந்து அமைவிடம் பகிரப்படவேண்டிய மொபைல் இலக்கத்தினை தெரிவு செய்யவும்.

இப்போது + அடையாளத்தினை கிளிக் செய்து Maps என்பதை தெரிவு செய்யவும்.

அதற்கு அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Send this Location என்பதை கிளிக் செய்து பகிர்ந்துகொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக