அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸை அவமதிக்கும் வகையிலான உடைகள் தனது விற்பனை தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் அந் நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பைடன் (JoeBiden) ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
இத்தேர்தலில் அந் நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பைடன் (JoeBiden) ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
அமெரிக்காவின் கறுப்பின மக்களின் ஆதரவைப் பெற, ஜோ பைடன் ஜமேகாவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியத் தாய்க்கும் பிறந்த கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அண்மையில் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டமையையடுத்து அவரை தனிப்பட்ட முறையில் தாக்கும் கருத்துகளுடன் ஒன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அத்தகைய தயாரிப்புகள் தங்கள் தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளதோடு விற்பனை வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத விற்பனையாளர்களின் கணக்குகளும் நீக்கப்படுமெனத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக