அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

கொசுக்கள் மூலம் பரவும் ஐந்து கொடிய நோய்கள்

 உலகிலேயே கொசுக்கள் மிகவும் ஆபத்தான கொடிய உயிரினமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த சிறிய உயிரினத்தின் மூலம், உயிரையே பறிக்கக்கூடிய பல கொடிய நோய்களின் தாக்கத்திற்கு நம்மை அறியாமலேயே வீழ்ந்துவிடுகிறோம்.வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் மக்கள் கொசுக் கடியால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை எளிதில் மக்களிடையே பரப்பி, நோய்களை உண்டாக்குகின்றன.

கொடிய கொசுக்களின் மூலம் பரவும் ஐந்து கொடிய நோய்கள் மற்றும் அவற்றின் அறிகுறிகள்:

லேரியா (Malaria)
மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இந்த கொடிய மலேரியா நோயானது அனாஃபிலிஸ் வகை கொசுக்களால் மக்களிடையே பரப்பப்படுகிறது. இந்த நோயின் பொதுவான அறிகுறிகளாவன காய்ச்சல் மற்றும் உடல் வலி. மலேரியாவை உண்டாக்கும் கிருமிகள் மெதுவாக உடலின் உள்ளே பரவ ஆரம்பித்து, இரத்த சிவப்பணுக்களைத் தாக்கும்.

லேரியாவின் அறிகுறிகள்: 
* தலைவலி 
* தசை வலி 
* குறைந்த இரத்த அழுத்தம் 
* குழப்பமான மனநிலை 
* குளிர் நடுக்கம் 
* மிகுந்த பலவீனம் 
* மூட்டுக்களில் கடுமையான வலி

டெங்கு (Dengue Fever)

டெங்கு என்பது ஏடிஸ் வகை கொசுக் கடியால் பரவும் நோயாகும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தை உறிஞ்சிய கொசு, மற்றவர்களைக் கடிக்கும் போது, டெங்கு மற்றவர்களுக்கு பரவுகிறது. டெங்கு நோயை எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் கூறுவர். ஏனெனில் இந்த வகை காய்ச்சலால் கடுமையான மூட்டு மற்றும் தசை வலி ஏற்படும். டெங்கு காய்ச்சல் மிதமானது முதல் தீவிரமானது வரை வேறுபடும். பெரும்பாலானோருக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறி கொசு கடித்த 4-7 நாட்கள் கழித்து தான் தெரியும்.

டெங்குவின் அறிகுறிகள்: 
* தீவிரமான தலைவலி 
* கண்களுக்கு பின் வலி 
* குமட்டல் மற்றும் வாந்தி 
* தசை மற்றும் மூட்டு வலி 
* மார்பு, கை, கால் மற்றும் முகத்தில் அரிப்புக்கள் பரவும் 
* திடீரென்று அதிக காய்ச்சல் தொடங்கும்


சிக்குன்குனியா (Chikungunya)
ஏடிஸ் ஈஜிப்டி வகை கொசுவின் கடியால் சிக்குன்குனியா பரவுகிறது. இது தீவிரமான, தொடர்ச்சியான மூட்டு வலியுடன், அரிப்பு மற்றும் காய்ச்சலையும் உண்டாக்கும். இந்த வகை காய்ச்சல் ஆபத்தானது அல்ல, ஆனால் கணிசமான நோயுற்ற தன்மையை ஏற்படுத்தும். இந்த வகை காய்ச்சலின் அறிகுறிகளாவன டெங்கு காய்ச்சலைப் போன்றே இருக்கும். ஆனால் சிக்குன்குனியாவில் பாதிக்கப்பட்ட கொசு கடித்து 2-4 நாட்களில் இருந்து அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

சிக்குன்குனியா அறிகுறிகள்: 
* குமட்டல் 
* வாந்தி 
* மலச்சிக்கல் 
* தலைச்சுற்றல் 
* கைகள் மற்றும் பாதங்கள் குளிர்ச்சியுடன் இருப்பது 
* தசை மற்றும் மூட்டுத் தசைகளில் தீவிர வலி 
* தொண்டை புண் 
* கடுமையான தலைவலி 
* தீவிரமான அடிவயிற்று பிடிப்புகள்


ஜிக்கா வைரஸ் (Zika virus)
ஜிக்கா வைரஸ் என்னும் நோயானது கொசுக்களால் பரவக்கூடியது. இது வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். மஞ்சள் காமாலை, சிக்குன்குனியா மற்றும் டெங்குவிற்கு காரணமான கொசு தான், இந்த வகை நோய்க்கும் காரணம். இதன் அடைகாக்கும் காலம் ஓரிரு நாட்கள் என்று நம்பப்படுகிறது. 
 
ஜிக்கா வைரஸ் அறிகுறிகள்: 
* மூட்டு வலி 
* காய்ச்சல் 
* அரிப்பு 
* தலைவலி 
* களைப்பு 
* தசை வலி 
* விழி வெண்படல அழற்சி


ப்பானிய என்செபாலிடிஸ் (Japanese encephalitis)
இது கொசுக்களால் பரவும் ஒரு வகையான வைரஸ் நோயாகும். இது மூளையைச் சுற்றியுள்ள சவ்வுகளில் அழற்சியை ஏற்படுத்தும். இந்த வகை நோயை ஜப்பானிய மூளையழற்சி என்றும் அழைப்பர். இந்த தொற்றுக்களின் அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படையாக தெரியாது, மிதமானதாகவே இருக்கும். ஆனால் போகப் போக தீவிரமாகும்.

ப்பானிய என்செபாலிடிஸ் அறிகுறிகள்: 
* அதிகளவு காய்ச்சல் 
* கழுத்து விறைப்பு 
* கோமா * வலிப்பு 
* ஸ்பாஸ்டிக் முடக்கம் 
* தன்னிலையிழத்தல்

எனவே இம்மாதிரியான நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு, கொசுக்களை அழிக்கும் மற்றும் விரட்டும் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக