அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தலைவலிக்கு பாட்டி வைத்தியம்

கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.

தலைவலி தீர வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரம் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசவும் தலைவலி குணமாகும்

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

தலைவலி குறைய கிராம்பை எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு, மை போன்று அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்

தலைவலி குறைய கடுகுத்தூள், அரசி மாவு இவற்றை சரிப்பாதி எடுத்து ஒரு களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் விரைவில் தலைவலி குணமாகும்.

முள்ளங்கி சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.

புதினா இலையை எடுத்து நன்றாக இடித்து சாறு எடுத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும். டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.

தலைவலி வருவதற்கான அறிகுறி தெரிந்தால் உடனே பாதாம் பருப்பு சாப்பிடவும்.

தலைவலியால் அடிக்கடி அவஸ்தை படுபவர்கள் தினமும் காலை உணவு அருந்துவதற்க்கு முன் 2 டேபிள் ஸ்பூன் தேனை மிதமான வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் கலந்து குடிந்தால் தலைவலி குணமாகும்.

துளசி தலைவலியை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது, அதனால் தினமும் ஒரு கோப்பை தண்ணீரில் 4 துளசியை போட்டு நன்கு கொதிக்க வைத்த பின் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தவும்.

இவ்வாறு குடிப்பதால் தலைவலியில் இருந்து விரைவில் விடுபெறலாம்.

அதேபோல் தலைவலி தீர இலவங்கம் பட்டையை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.அதேபோல் தலைவலி தீர சம அளவு இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்து நன்றாக கலந்து குடித்தால் தலைவலி குணமாகும்.

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக