அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பெண்களும் மாதவிடாயும் ஒரு பார்வை

பொதுவாக பெண்கள் மாதவிடாயின் சோர்வடைந்து விடுவார்கள். அந்த நாட்களில் பெண்கள் தங்களின் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.மேலும்  ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்களுக்கு டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை, கால்வலி போன்ற பிரச்னைகளும் வருவதுண்டு.

இது தவிர வாந்தி, செரிமானக் கோளாறு  என ஐந்து நாளும் நரகம்தான். கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம்.

1.கால்சியம் சேர்த்துக் கொள்ளுங்கள்

அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், கிராம்ப்ஸ் புடித்து அடி வயிற்றில் அதிக வலியும்  இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகியவற்றை  சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்னைகள் குணமடையும்.

2.வைட்டமின்களை தவிர்க்காதீர்கள்

வைட்டமின் பி6  நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’  – ஐ குறைக்கிறது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கிறது. மிகவும் முக்கியமாக,  மாதவிடாய்க்கு முன்பு மேற்கூறிய வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கும்  ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன், தர்பூசணி, கீரை போன்றவற்றை சாப்பிடுங்கள். வலியில்லாத மாதவிடாய்க்கு  தயாராக இந்த வைட்டமின்கள் தேவை.

3.நிறைய தண்ணீர் குடியுங்கள்

பலர்  பீரியட்ஸின் போது கழிப்பறையை பயன்படுத்துவதை எரிச்சலான ஒரு விஷயமாக நினைத்து,  அந்த நாட்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள்.

ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் ஜூஸ்களையும் குடிக்கலாம்.

4.சாக்லேட் சாப்பிடுங்கள்

நாம் மகிழ்ச்சியாகவும், டென்ஷன் இல்லாமலும் இருக்க மூளையில் செரட்டோனின் என்ற அமிலச்சுரப்பு அவசியம்.

டார்க்  சாக்லேட்டுகளைச்  சாப்பிடுவதால் செரட்டோனின் அதிக அளவு சுரக்கிறது. அதனால் மாதவிடாயினால் ஏற்படும் டென்ஷன், பதட்டம்  குறைய சாக்லேட் சாப்பிடுங்கள்.

5.அதிக கொழுப்பு வேண்டாம்

அதிக கொழுப்புள்ள வெண்ணெய், கிரீம் போன்ற உணவுகள் பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைத் தூண்டிவிடும். மாதவிடாய் காலத்தில் இதனால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

6.ஃபைபர் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்னையால் பலர் சாப்பிடவே மாட்டார்கள்.  சாப்பிடாமல் இருப்பதால் கிராம்ப்ஸ்தான் அதிகம் வரும். அதனால் உணவில் பட்டாணி, கோதுமை, ரெட் பீன்ஸ், அவகாடோ, கொய்யா, ப்ராக்கோலி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள  ஃபீல் ஃப்ரீயாக உணருவீர்கள்.
 
ரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருதா? காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக மாதவிடாய் பிரச்சினை அதிகமானவர்களுக்கு  இருக்கக்கூடிய ஒன்று. அதிலும் ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதும் ஒன்று இதனை Polycystic ovary syndrome அழைக்கப்படுகின்றது.

அப்படி மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறது எனில் அது சாதாரண விஷயமாகக் கருதிவிட முடியாது. ஏனெனில் அதற்கு சில காரணங்களுக்கும் உண்டு.

தற்போது மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணங்களும் அதன் தீர்வுகளும் என்னவொன்று பார்ப்போம்.

நீங்கள் திடீரென உடல் எடை அதிகரித்தாலோ அல்லது உடல் எடையைக் குறைத்தாலோ இந்த பிரச்னை உண்டாகும். ஏனெனில் இந்த திடீர் உடல் மாற்றம் ஹார்மோன்களை நிலைகுலையச் செய்யும். அதனால் இந்த பாதிப்பு உண்டாகும்.

ஹார்மோன் சமநிலையின்மைக் காரணமாக கருப்பையில் சிறிய நீர்க்கட்டி உருவாகும். அதன் காரணமாகவும் இரண்டு முறை மாதவிடாய் வருதல், அதிக உதிரப்போக்கு ஏற்படும்.

கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டாலும் உடல் திடீரென மாதவிடாய் உதிரப்போக்கை உண்டாக்கும்.

பாலியல் தொற்று, பூப்படைதல், கருப்பையில் பிரச்னை போன்ற காரணங்களாலும் வரலாம்.

இதை சரி செய்ய என்ன செய்யலாம்?
கார்போஹைட்ரேட் உணவு மற்றும் ஜங் ஃபுட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் கீரை வகைகள் என சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆயுர்வேத பானங்கள் அருந்தலாம். கற்றாழை ஜூஸ், இஞ்சி ஜூஸ் என குடிக்கலாம்.
வெல்லம் மற்றும் நல்லெண்ணெய், எள் சாப்பிடுவதும் கருப்பை ஆரோக்கியத்திற்கு நல்லது.

மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை உண்டாக்கும். எனவே அதை தவிர்க்க யோகா, தியானம் , இனிமையான பாடல்கள் கேட்பது என மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் அதிக அளவில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பழக்கம் கருப்பையை நேரடியாக பாதிக்கும். 

மாதவிடாய் காலங்களில் சர்க்கரை சாப்பிடக்கூடாதாம்! ஏன் தெரியுமா?

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் மிகந்த சிக்கல்கள் நிறைந்த நாட்களாக காணப்படும்.

மாதவிடாய் காலங்களில் வலிகளை அதிகரிக்கும் எந்தவிதமான உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. அதில் சர்க்கரையும் ஒன்றாகும்.

மாதவிடாய் காலத்தில் சர்க்கரை போன்ற இனிப்பு பொருட்களை எடுத்து வருவது நிலைமையை மோசமாக்க வாய்ப்புள்ளது. மாதவிடாய் காலங்களில் இது வேதனையை தரும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

அந்தவகையில் சர்க்கரையை சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

சர்க்கரை சாப்பிடுவதால் வயிற்றில் நீர் தேக்கம் ஏற்பட்டு அது வயிற்று வீக்கத்திற்கு வழி வகுக்கும். இதனால் பெண்களுக்கு அமிலத்தன்மை, வயிற்று வலி, வாயு போன்றவற்றை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில் அதிகமான சர்க்கரையை எடுத்துக் கொள்வது உங்களுக்கு பிசிஓடி பிரச்சனைக்கு வழி வகுக்கும். ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கம் காரணமாக அதிக சர்க்கரை சாப்பிட்டால் அதன் அறிகுறிகள் இன்னும் மோசமாகி விடும்.

மாதவிடாய் நேரத்தில் நீங்கள் உணவில் அதிக சர்க்கரை சேர்ப்பது உங்க பருக்களை மேலும் மோசமாக்கும்.

அதிக சர்க்கரை உங்க தோல் திசுக்களை சிதைத்து தொய்வு ஏற்பட வழிவகை செய்து விடும்.

சர்க்கரையால் இன்சுலின் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. இது உங்கள் மன அழுத்த ஹார்மோன் ஆன கார்டிசோல் அளவை கூட்டுகிறது.

எனவே மாதவிடாய் காலங்களில் சர்க்கரையை தவிர்ப்பது உங்க உடல் நலத்திற்கு நல்லதாகும்.
 
மூடநம்பிக்கைகளுக்காக மாதவிடாயை தள்ளி போடுபவரா…?

கோயிலுக்கு செல்ல வேண்டும், வீட்டில் விஷேச நாட்களில் பூஜை செய்ய வேண்டும் என்று பல பெண்கள் ஒவ்வொரு மாதமும் இயற்கையாக ஏற்படும் மாதவிடாய்யை மூடநம்பிக்கையின் காரணமாக தள்ளி போடுகின்றனர்.

பெரும்பாலும் பலரது வீட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியே ஒரு அறையில் தங்க வைப்பர். அவர்களுகென்று தனி தட்டு, படுக்கை அனைத்தும் தனியாக தீண்டதகாதது போல் உணர்ந்து வெளியில் இருக்க வைப்பர்.

இதனால் பூஜை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் பலரும் இதனை தள்ளி போடுவதற்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கி உபயோகிக்கின்றனர்.

இதனால் விளைவுகள் ஏற்படும் என்பது தெரிந்தும் அதனை தொடர்ந்து செய்கின்றனர். தற்போது உள்ள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறதா என்றே பலரும் யோசனை செய்கிறார்கள்.

முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியாக அறையில் இருக்க வைத்தனர் என்றால் அந்நேரத்தில் ஓய்வு தேவை அதன் காரணத்தாலே அவர்களுக்கென்று தனியாக ஒரு இடம் கொடுத்தார்கள்.

ஆனால் நாளடைவில் அது தீட்டாக மாறி பலரும் தீண்டதாகத பெண்கள் என்றே சித்தரித்தனர்.

மாதவிடாய் நேரத்தில் எந்த ஒரு தெய்வமும் கோயிலுக்கு வரக்கூடாது, பூஜை செய்யக் கூடாது என்று எந்த இதிகாதசத்திலும் குறிப்பிடவில்லை.

இப்போது உள்ளவர்கள் சாமி மீது அதீத மூடநம்பிக்கையில் இருக்கின்றனர் ஆனால் அதில் ஒரு பங்கு கூட உடல்நலம், ஆரோக்கியம் என்பதில் கவனம் செலுத்தவில்லை.

இம்மாத்திரை உட்கொள்வதினால் மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய் போன்றவற்றை வரக்கூடும்.

அதேபோல் இதனை ரத்த அழுத்தம், தலைவலி, ஒற்றை தலைவலி, உடல் பருமன் ஆகியோர் கண்டிப்பாக உட்கொள்ள கூடாது. பெண்கள் இதனை சாப்பிடுவதால் பெரும் பிரச்னைகளை பின்நாளில் சந்திக்க நேரும்.

தவறான புரிதலுக்காக, சாமி என்பதற்காகவும் மூடநம்பிக்கையின் உச்சத்திற்கு சென்று இது போல் அனாவசியமான செயல்களை செய்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் தள்ளி போடுவதற்கு மாத்திரை உட்கொள்வது தவறு! உடல்நலத்திற்கு தீங்கு!
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக