ஜப்பானில் பொது இடங்களில் முகக்கவசமின்றி நடமாடுவோரை முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தும் புதியவகை ரோபோவொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெப்பர்‘ (Pepper) என அழைக்கப்படும் குறித்த ரோபோவானது ஜப்பானைச் சேர்ந்த ‘சொப்ட் பேங்க்‘ (Softbank) என்ற நிறுவனத்தினால் 47 இன்ச் உயரத்துடன் நெஞ்சினில் சிறிய கணினியை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் வைக்கப்படும் இவ் ரோபோவானது மக்களின் முகத்தை படம் பிடித்துக் கொள்வதால் அவர்களில் முகக்கவசம் அணிந்திருப்போரை நன்றி கூறி வரவேற்பதோடு அணியாமலிருப்போரை அணியுமாறும் வலியுறுத்தி வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக