கண்ணுக்குத் தெரியாத 'வைரஸ்'- இங்கு
களம் இறங்கி ஆடுதடா, கண்ணா!
இப்படியும் கூட நடக்குமா- என
எண்ணிக்கூட பார்த்ததில்லையடா!
எப்படி? இப்படி? -என
ஏராளமாய் கேள்விகளடா!
அக்கம் பக்கம் அமைதி- என
மூன்று மாதம்…
அப்படி இப்படி- என
இரண்டு மாதம்…
அப்பாடி, என உட்க்கார நினைத்தபோது - மீண்டும்
ஒரு மாத முடக்கம்
எத்தனை மனப்போராட்டம்?
எத்தனை மனச்சஞ்சலம்?
.
கண்ணுக்குத்தெரியாத 'வைரஸ்'- இங்கு
களம் இறங்கி ஆடுதடா, கண்ணா!
கோதையைத் தெரியும்
கோபியைத் தெரியும்
கோவிட் யாரடா கண்ணா?
பால் விற்கும் பாலணைக் காணோம்!
பழம் விற்கும் பொன்னியைக் காணோம்!
பாமர மக்கள் பாவமடா- கண்ணா!
பட்டினிப் பிரவேசம் நடக்குதடா!
வெயில், மழை பாராமல்
வேலிப் போட்டு- உன்னைக்
காவல் காத்தனரே!
காவல் துறையினர்
காவல் காத்தனரே!
இரவு பகல் பாராமல்
உறக்கமின்றி
உயிர் காக்கின்றனர் - மருத்துவக்குழுவினர்
உலகைக் காக்குதடா!
இவர்கள் கரங்கள்
உயிர் காக்குதடா!
.
கண்ணுக்குத்தெரியாத 'வைரஸ்'- இங்கு
களம் இறங்கி ஆடுதடா- கண்ணா!
சித்தம், அலோபதி, ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவம்- என எல்லாம்
சிரத்தையோடு
சிறப்பாகச் செயல்படுகின்றனரடா!
சீக்கிரம் காண்போமடா விடை
விரைவில் நடக்கும்
விரைந்து நடக்கும்
விடை கொடுப்போமடா! - வினைக்கு
விடை கொடுப்போமடா!
உலகின் அழகினை- மீண்டும்
ரசிப்போம்!
உறுதியடா இது
உறுதி!
.
கண்ணுக்குத் தெரியாத 'வைரஸ்' இன்று
காணாமல் போனதடா!-கண்ணா!
காணாமல் போனதடா!
கனவு மெய்ப்படும்
கல்கி காவியாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக