அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 17 டிசம்பர், 2020

‘பாலைவனத்தில் நடந்த ஃபேஷன் ஷோ…’ – நட்ட நடு வெயிலில் மணல்மேட்டில் நடந்த அழகிகள்


செயிண்ட் லாரன்ட் (Saint Laurent) பாலைவனத்தில் கோடை 2021-ஆம் ஆண்டின் பேஷன் ஷோ நடத்தப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த செவ்வாய்க்கிழமை (15.12.2020) அன்று பெண்களுக்கான பேஷன் ஷோ பிரான்ஸ் செயிண்ட் லாரன்ட் பாலைவனத்தில் நடைபெற்றுள்ளது.

எப்போதும் பேஷன் ஷோ என்பது ஒரு பிரமாண்டாமான அரங்கில் நூற்றாக்கணக்கான மக்களிடையே நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகாக நட்ட நடு வெயிலில் பாலைவனத்தில் நடைபெற்றுள்ளது.


இதுகுறித்து கூறிய அஞ்சா ரூபிக், “இதை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை பாலைவனம் என்பது அமைதி, திறந்தவெளி, மெதுவான இசை தாளத்திற்கான ஏக்கத்தை குறிக்கிறது’ என உணர்வு பொங்க கூறியுள்ளார்.


அந்நிகழ்வில் அழகிகள் அனைவரும் அசத்தலான உடை அணிந்து பாலைவன மணல்பரப்பில் நடந்து வரும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த பேஷன் ஷோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக