அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 23 டிசம்பர், 2020

ரேஞ்- றோவர் வைத்திருப்பவர்களே ஜக்கிரதை (வீடியோ இணப்பு)


ரேஞ் றோவர் கார்களை வைத்திருப்பது வழக்கம். ஆனால் குறித்த காரின் மீது நீண்ட காலமாக ஒரு புகார் இருந்து வருகிறது. 
 
காரை பார்க் செய்த பின்னர் சில வேளைகளில் அது ரிவர்ஸ் கியரில் செல்கிறது என்று. குறித்த கார்கள் பார்க் செய்த பின்னர் சில வேளைகளில் திடீரென பின் நோக்கி செல்வது தொடர்பாக அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் மட்டும் 513 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனை ரேஞ் றோவர் கம்பெனி கணக்கில் எடுக்கவில்லை.


அமெரிக்காவில், லொஸ் ஏஞ்சல்ஸில் (Los AngelesL) ஷாடி Fபர்ஹாட் (Shadi Farhat, 41) எனும் ஒரு பெண் காரை பார்க் செய்துவிட்டு காரில் இருந்து இறங்க முற்பட்டவேளை கார் பின் நோக்கிச் சென்று (காணொளியை கவனிக்கவும்) அவர் நிலத்தில் வீழ்ந்து, கார் அவர் வலது பக்க தோழ் பட்டை மீது ஏறிச் சென்றுள்ளது.

இதன் காரணமாக அவர் ஒரு சில நாட்கள் கழித்து இறந்து போனார். அவரது கணவர் தற்போது ரேஞ் றோவர் கம்பெனி மீது வழக்கு தொடுத்துள்ளார். அதற்கு ஆதாராமாக தம்மிடம் உள்ள வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். 




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக