அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 25 ஜூன், 2021

ஜூம் (Zoom) மீட்டிங்கை ரெகார்ட் செய்ய


ஜூம் பயன்பாட்டில் எப்படி வீடியோ அழைப்புகளை எளிமையாக ரெகார்ட் செய்வது என்று பார்ப்போம். கொரோன உரடங்கிற்கு பின்னர் உலகளவில் ஜூம் பயன்பாட்டின் பயன் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரும் இப்போது ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.ஜூம் பயன்பாட்டில் நிறுவனம் சமீபத்தில் வீடியோ கால் ரெகார்டிங் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த ஜூம் ரெகார்ட் மீட்டிங் அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் நேரடியாக ஜூம் கிளவுட் அல்லது உள்ளது டெஸ்க்டாப்பில் ஜூம் மீட்டிங்கை சேமித்துக்கொள்ளலாம். உங்கள் ஜூம் கிளவுட் அக்கௌன்ட்டில் இருந்து ரெகார்ட் செய்த வீடியோவை பார்க்கவும், ஷேர் செய்யவும் நிறுவனம் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது.

ஜூம் டெஸ்க்டாப் பயன்பாட்டில் ஒரு மீட்டிங்கை ரெகார்ட் செய்ய, நீங்கள் ஜூம் பயன்பாட்டைத் ஓபன் செய்து, ஹோஸ்ட்கள் வழங்கிய ஐடியைப் பயன்படுத்தி மீட்டிங்கில் சேர வேண்டும். நீங்கள் மீட்டிங்கில் சேர்ந்ததும், திரையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ரெகார்ட் பட்டனை கிளிக் செய்யவும். டூல்பார் மறைந்துவிட்டால், கர்சரை மெனுவுக்கு நகர்த்தி ரெகார்ட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.

இதை சரியாக செய்ய, மீட்டிங்கை பதிவு செய்யும் உரிமையை ஹோஸ்ட் உங்களுக்கு வழங்கியுள்ளாரா என்று உறுதிப்படுத்த வேண்டும். ரெகார்ட் தொடங்கியவுடன், திரையின் மேல் இடது மூலையில் ஒரு ரெகார்ட் லேபிளைக் காண்பீர்கள். பதிவைத் தொடங்க, இடைநிறுத்த மற்றும் நிறுத்த பட்டன்களை பயன்படுத்தலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட வீடியோ டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும்.

ஜூம் மொபைல் ஆப்ஸ் மூலம் ஒரு மீட்டிங்கை ரெகார்ட் செய்ய, ஜூம் பயன்பாட்டைத் திறந்து ஐடியைப் பயன்படுத்தி மீட்டிங்கை தொடங்கவும். ஜூம் மீட்டிங் வழங்கும் நேரத்தில் மேலே இருக்கும் மோர் விருப்பத்தை கிளிக் செய்து அதன் கீழ் இருக்கும் 'record' விருப்பத்தை கிளிக் செய்து ரெகார்டிங் செய்யவும். பதிவுசெய்யப்பட்ட வீடியோ செயலாக்கப்படும், மேலும் மீட்டிங்கை முடித்த பிறகு அவற்றை இணையத்தில் my recordings இடத்தில் பார்க்கலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக