அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 11 ஜூலை, 2021

ட்விட்டர் அக்கவுண்ட் புளூ டிக் பேட்ஜ் வாங்குவது எப்படி? – முழு விபரம்!


ட்விட்டரில் நீல நிற டிக் பெற தகுதியுள்ள பிரிவுகளைச் சேர்ந்த கணக்கை வெரிஃபைட் வாங்குவதற்கான புதிய வழிமுறைகளை ட்விட்டர் வெளியிட்டிருக்கிறது. 
 
அதே போல இதற்கு முன் வெரிஃபைடுக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை ட்விட்டர் நிறுவனம் கூறாது. ஆனால் இனி நிராகரிப்புக்கான காரணமும் நமக்கு இ-மெயில் வழியாக கிடைக்கும். இது போல இ-மெயில் நோட்டிஃபிகேஷனை ட்விட்டர் இதற்கு முன் அனுப்பியதில்லை. ட்விட்டர் வெரிஃபைடுக்காக நிராகரிக்கப்பட்டவர்கள், 30 நாட்களுக்கு பின்னர் மீண்டும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த புதிய விதிகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ட்விட்டரில் உங்கள் கணக்கிற்கு நீல நிற டிக் பெற என்ன செய்ய வேண்டும்?

நீல நிற டிக் பெறவேண்டும் என்றால் நீங்கள் அரசின் முக்கிய பொறுப்பு வகிப்பவராக, தேசிய அளவிலான அதிகாரியாக, முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதியாக, செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்களாக அல்லது செய்தியாளராக, சினிமா ஸ்டூடியோக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். தொலைக்காட்சி நெட்வொர்க்குகளின் கணக்குகள், மியூசிக் நிறுவனங்கள், சினிமா – விளையாட்டு பிரபலங்கள், மதிப்புவாய்ந்த தனி நபர்கள், செயற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும். மேற்கண்ட எந்தவொரு வகையிலும் நீங்கள் சேராதவராக இருந்தால் நீங்கள் நீல நிற டிக்குக்காக விண்ணப்பிக்க வேண்டாம்.

ட்விட்டர் கணக்கை வெரிஃபைட் பெற நீங்கள் பெரிய ஃபாலோயர் எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் ஒரு நிறுவனம் / பிராண்ட் / அமைப்பு மற்றும் ஒரு ஆர்வலர் / செல்வாக்கு மிக்க தனிநபராக விண்ணப்பிப்பவர்கள் என்றால், உங்கள் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதே புவியியல் பிராந்தியத்தில் உள்ள கணக்குகளில் முதல் .05% ஆக்டிவ் கணக்குகளுக்குள் இருக்க வேண்டும்.



உங்கள் நம்பகத்தன்மையை சரிபார்க்க நீங்கள் ஒரு வலைத்தளத்தை நம்பினால், நிறுவனத்தின் கணக்கு சரிபார்க்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வலைத்தளம் உங்கள் பெயர் மற்றும் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட வேண்டும்.

செய்தியாளர்களுக்கான சிறப்பு வழிமுறைகள்:

ஒரு பெரிய பின்தொடர்பவர்களைக் கொண்ட பல ஊடகவியலாளர்கள் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த போதிலும் தங்கள் விண்ணப்ப படிவம் நிராகரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர். இது குறித்து ட்விட்டர் நிர்வாகி பிரைன் தெளிவுபடுத்தினார், நிறைய பத்திரிகையாளர்கள் தொழில்நுட்ப சிக்கல்கள் அல்லது அவர்களின் விண்ணப்பத்தில் சிறிய சிக்கல்கள் காரணமாக நிராகரிக்கப்பட்டனர், அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் அல்ல என்பதால் நிராகரிக்கப்படவில்லை என்றார். சரிபார்ப்பு படிவத்தை நிரப்புவதற்கு முன் நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிகளை ட்விட்டர் இப்போது பட்டியலிட்டுள்ளது. அவை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ட்விட்டர் சுயவிவரம் நீங்கள் தொடர்புடைய செய்தி நிறுவனத்தைக் குறிப்பிட வேண்டும் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கான இணைப்பு உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.

உங்கள் செய்தி நிறுவனம் குறிப்பிடத்தகுந்த ஒன்று மற்றும் ஏற்கனவே ட்விட்டரில் சரிபார்க்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தவும்.

விண்ணப்ப படிவத்தை தாக்கல் செய்யும் போது, ​​பத்திரிகையாளர்கள் பக்கம் / பயோ அல்லது செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் அவர்களை குறிப்பிடும் கட்டுரைகளுடன் இணைக்க வேண்டும்.

நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் அல்லது ஒரு சுயாதீன பத்திரிகையாளர் என்றால், விண்ணப்பிப்பதற்கு 6 மாதங்களில் சரிபார்க்கப்பட்ட வெளியீடுகளில் 3 கட்டுரைகளுக்கான இணைப்புகளை நீங்கள் வழங்க வேண்டும்.


ஆந்தை
ஆந்தை ரிப்போர்ட்டர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக