அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

குடும்ப கௌரவத்திற்காக 16 வயது சிறுமியை குடும்பத்தினர் உயிருடன் புதைத்த கொடூரம்

ஆண்களுடன் நட்புறவுடன் பழகியமைக்காக 16 வயது சிறுமியொருவர் அவரது குடும்பத்தினரால் உயிருடன் புதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.
துருக்கியின் அடிமான் (Adiyaman) பிரதேசத்தைச் சேர்ந்த மெடின் மெபியென்ற மேற்படி சிறுமி காணாமல் போய்விட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அவர் காணாமல் போய் 40 நாட்கள் கழித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவரின் வீட்டுக்கு வெளியேயுள்ள வெளியில் 6 அடி ஆழமான குழியொன்றில் அவர் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை பெறுபேறுகளின் பிரகாரம் மெடின் மெபி உயிருடன் புதைக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

""அவரது உடலில் காயங்களோ அல்லது நஞ்சு புகட்டப்பட்டமைக்கான அடையாளமோ காணப்படவில்லை. சுய நினைவுடன் இருக்கையில் மண்ணால் மூடப்பட்டு மூச்சுத் திணறியே மரணம் சம்பவித்துள்ளது'' என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மெடின் மெபியின் தந்தையும் பாட்டனாரும் கைது செய்யப்பட்டனர்.

மெடின் மெபி ஆண் நண்பர்களுடன் பழகுவதை தமது குடும்பத்தினர் கௌரவக் குறைவாக எண்ணி கவலையடைந்திருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் போது அவரது தந்தை தெரிவித்திருந்தார். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக