அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

துணைவியை பாலியல் ரீதியில் திருப்திப்படுத்த 82 மருந்துகளை உபயோகித்த ஹிட்லர்

சர்வாதிகாரி ஹிட்லர், தனது துணைவியை பாலியல் ரீதியில் திருப்திப்படுத்த "வயாகரா' மாத்திரையின் ஆரம்ப கட்ட கண்டுபிடிப்பான மருந்துப் பொருள் உள்ளடங்கலாக 82 மருந்துகளை உபயோகித்த இரகசியம் புதிய புத்தகம் ஒன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இளம் காளை மாட்டின் விந்தணுக்களையும் விந்தணு சுரப்பிகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்தானது தனது துணைவியான 33 வயது ஈவா பிரோனனை பாலியல் ரீதியில் திருப்திப்படுத்துவதற்கான சக்தியை தனக்கு வழங்கும் என ஹிட்லர் (இறக்கும் போது 56 வயது) நம்பியுள்ளார்.

அத்துடன் அவர் ஆண்களின் டெஸ்ரொஸ் தெரோன் ஓமோனையும் உடலில் ஏற்றிக் கொண்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் எலிப் பாஷணக் கூறுகளை உள்ளடக்கிய வாயு தொல்லைக்கு எதிரான மருந்துகளையும் ஹிட்லர் உட்கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் "வோஸ் ஹிட்லர் இல்?' புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஹிட்லரின் தனிப்பட்ட மருத்துவரான தியோடர் மோரெலின் ஆவணங்களிலிருந்து பெற்ற தரவுகள் மூலமே ஹிட்லரின் இந்த மருந்து பாவனை இரகசியம் வெளிப்பட்டுள்ளது.

அத்துடன் ஹிட்லர் தனது உடல் ஆரோக்கியம் குறித்தும் அச்சம் கொண்டிருந்தார். அவர் தனது ஆரோக்கியத்திற்காக 28 மருந்துகளை தினசரி உபயோகித்து வந்துள்ளார்.

புற்றுநோய் தொடர்பான அச்சத்துடன் இருந்த ஹிட்லர், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைவலிகள் என்பவற்றால் துன்பப்பட்டு வந்துள்ளார்.

வேகம், அமைதி, உறக்கம் என்பவற்றுக்காகவும் ஹிட்லர் மருந்துகளை உபயோகித்துள்ளார்.

1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹிட்லர் தன்னைத் தானே சுட்டும், ஈவா சயனைட் அருந்தியும் மரணமானமை குறிப்பிடத்தக்கது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக