அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நிராகரிக்கப்பட்ட நிஜங்கள்

கவிதாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. வீட்டில் இவ்வளவு செல்லமாக ஏண்டா வளர்ந்தோம் என்று உள்மனம் துடிதுடியாய் துடித்தது. ஆறு மாத கர்ப்பிணி, மூச்சு எடுக்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. ஒரே களைப்பு. முதல் பிரசவம் என்பதால் இந்த உணர்வோ... சிறிது காலம் சமைப்பதே அவளுக்கு மனதை குமட்டியது.

பக்கத்து வீட்டு ஆரண்யா தான் அவளை மாய்ந்து மாய்ந்து பார்த்தாள். என்ன உணவு செய்தாலும், தூக்கிக் கொண்டு ஓடி வருவாள். பிள்ளை வயிற்றில இருக்கும் போது நல்லா சாப்பிடணும். அப்போதுதான் புள்ள சத்தா தெம்பா குறை இல்லாம பிறக்கும் ஆரண்யா அக்கா, அழாத குறையாக சாப்பாடு கொடுக்கும் அன்பின் கவிதா நெகிழ்ந்தே போனாள். அம்மா இல்லாத கவிதா இரண்டு வயது முதல் அப்பாவிடம்தான். வேலைக்கார அம்மாவிடம் வளர்ந்த அவளுக்கு தாய் பாசமே கிட்டவில்லை. கண்ணுக்கு கண்ணாக இருந்து எந்த குறையும் இல்லாம வளர்த்தது அப்பா சிவராம்தான். அவர் கூட கவிதா திருமணம் முடித்து நான்கு மாதங்களில் அவள் பிரிவின் கொடுமையோ, தனிமையோ இந்த உலகை விட்டே போய்விட்டார்.

சொந்த மாமா மகன் வினுஷன்தான் அவள் கணவனாக வந்தார். சிறு வயது முதல் பார்த்து பழகிய சாதாரண ஸ்னேகம் காதல், கல்யாணம் என்ற தீவிர நட்பே இல்லாத போர்வையில் திருமணம் செய்து, வினுஷனுடன் இரண்டு வருட கல்யாண வாழ்க்கை இனிப்பும் இல்லாத, பிடிப்பும் இல்லாத சமாந்தர வாழ்க்கை.

வினுஷன் பார்ப்பதற்கு எடுப்பான கவிர்ச்சியான தோற்றம். அவன் அழகை மிகை படுத்தும் அழவுக்கு கவிதாவின் காந்த தோற்றம். எங்கு இருவரும் சென்றாலும் எல்லோரின் கண்ணும் அவர்கள் பக்கம் சரியாமல் இல்லை. எல்லாவற்றுக்கும் ஓடோடி ஓடோடி வரும் ஆரண்யாதான் வினுஷனை விட பெரிதாக தெரிந்தாள்.

கிளினிக், ஹொஸ்பிட்டல் என்று பிள்ளைக்கான எந்த வேலைகளிலுமே வினுஷன் அவளுக்கு உதவாதது பெரிய மனவேதனையாக இருந்தது. ஆனாலும் ஆரண்யாவின் அன்பு அவளை சற்று தைரியப்படுத்தியது.

அன்று வாய்விட்டு கேட்டாள், ‘என்ன வினு முன்னெல்லாம் அடிக்கடி வெளிய கூட்டிக்கிட்டு போவீங்க. இப்போது கொஞ்சம் கூட என்ன கவனிக்கிaங்க இல்ல’

வினுஷன் வாய்விட்டு சிரித்தான். ‘கவி இப்போ நீ இருக்கிற நிலையில ஒன்ன அங்க இங்க கூட்டிக்கிட்டு போறது அவ்வளவு நல்லதில்ல. ஜட்ஸ் வோக்கிங் தினமும் இந்த இடத்தில போய் வாயேன்’ வினுஷன் பட்டும் படாமல் கூறியது கவிதாவுக்கு என்னவோ போல் இருந்தது. அன்று புதன்கிழமை வினுஷன்’ சாப்பாட்டு பார்சலுடன் வந்தான். ஒரு நாளும் இல்லாத வருகை ‘என்ன விசேஷம்’ கவிதா புரியாமல் கேட்டாள்.

சபேஷன் மாமா இறந்த வீட்டுக்கு போனேன். ஒன்னதான் கேட்டாங்க. நீ வரல்லன்னு ரொம்ப மனசு ஒடைஞ்சு போயிட்டாங்க. நீ கன்kவ்வா இருக்கன்னு சோறு கட்டி கொடுத்தாங்க... எனக்கு ஒன்ன விட்டு சாப்பிட மனசு கேட்கல அதுதான்.. வினுஷன் ஷ¥வில் இருந்து டையை கழட்டிக் கொண்டே கூறினான்.

துக்க வீட்டுக்கு போகாம துக்கச்சோறு சாப்பிடுற பண்பு நம்ம சலாசாரத்தில இல்லீங்க என்றவள் பழைய ரெஸ்ட்ரெண்ட் பில்ஸ் பத்தை கையில் எடுத்தாள். நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

12.10.2005 சிக்கன் புரியாணி, த்ரீ கறிவன் செலட், டெஸட் புருட்செலட் – 2 கப்ஸ் ரெண்டு பேர் 810/- 15.8.2005 மட்டன் கொத்து, சோஸ், செலட் டெஸட் 910/- 27.10.2005 பீஸா, பிஸ்கறி, ஐஸ்கிaம் 780/-

என்னங்க நான் இல்லாம நீங்க கப்பல்ஸ்ஸா போய் என்ஜோய் பண்ணின டீடேல்ஸ், ஸோ அந்த நேரம் என் ஞாபகம் வரல்ல எட்லீஸ்ட் செத்தவீடு சாப்பாடு சாப்பிட நேரம் மட்டும் என் ஞாபகம் வரணுமா... இவ்வளவு தெளிவா அறிவார்த்தமா கவிதா பேசுவாள் என்று வினுஷன் கனவில் கூட நினைக்கவில்லை.

கவிதா விட்டுக்கொடுக்க வில்லை. ‘என்ன இருந்தாலும் வயிற்றில் ஒங்க குழந்தை கூடிய மட்டும் மற்ற பொம்பளைகளை விட என்னை சந்தோஷமா வைச்சிருக்க பாருங்க’ கவிதை இடத்தை காலிச் செய்துவிட்டு திரும்பியவளை வினுஷன் இரும்பு பிடியாக பற்றினான்.

‘ஸ்டுப்பிட்’ ஒன் மேல எனக்கு எவ்வளவு பிடிப்பு இருக்கு, பாசம் இருக்கண்ணு தெரியுமா பைத்தியக்காரி என்று ஓங்கி கன்னத்தில் அறைந்தான். நம்ம குழந்தை மேல எவ்வளவு உயிரு இருக்குண்ணு தெரியுமாடி என்று கத்தினான். அது குழந்தை இல்ல என் மறு ஜென்மம். கவிதா அதிர்ந்தே போனாள். நம்ப வேண்டிய என்னை நம்பு! நான் சொல்றதக்கேளு... ஒனக்கிட்ட நடிச்சு ஒன் வாழ்க்கை நாசமாக்கிறவங்களோட பழகி என் வாழ்க்கையும் நாசம் பண்ணாத.... ஃபூல். கத்தினாள்.

ஒனக்கும் எனக்கும் இந்த இடத்தில பிரிச்சி கூத்து காட்டுறத வேறு யாரும் இல்ல நீ நம்பி குழைஞ்சி குழைஞ்சி பழகிaயா ஆரண்யா அவதான்.

கவிதாவுக்கு தலைசுற்றியது ஆரண்யா அக்காவா? புரியாமல் விழித்தாள். சின்ன வயசில அவன் மாமா பையன் ஒன்ன விரும்பினானாம் நீ அவனை மதிக்கலையாம், குடுத்த மடலை கிழிச்சு மூஞ்சில வீசிட்டீயாம். கவலை தாங்காம அவன் நஞ்சு குடிச்சு இறந்திட்டானாம்... அதை மனசில வைச்சி... அவனோட அக்காவை என்னோட பழக வைச்சு ஒன்ன பிரிக்கிறா... ஒன்ன நெருங்க விடுறா இல்ல, சந்தோஷமா இருக்க விடுறா இல்ல, எனக்கு இதுக்கு மேல இங்கு இருக்க முடியாது கவிதா...

இங்க இருந்தா நம்ம குடும்பம் பிரிஞ்சிடும்... எனக்கு பயமா இருக்கு. வா எங்கேயாவது போயிடுவோம். கவிதாவை அணைத்துக்கொண்டான் வினுஷன். கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது. அவனால் பேச முடியவில்லை. ஆரண்யா வீட்டினினுள் பழைய சிரிப்புடன் நுழைந்தாள். அவள் முகமூடி முகத்தை மன கணனியில் கணக்குப் போட்டுப் பார்த்தாள். எத்தனையோ நிஜ காதல்கள் நிராகரிக்கப்பட்டதால் நிஜ வாழ்க்கை போலியாக போய்க் கொண்டிருப்பதன் உண்மை அவளுக்கு அப்போதுதான் புரிந்தது. ஆரண்யா பழி தீர்க்கும் படலம். எங்கு போய் முடியும். இறைவன்தான் முடிவு செய்வான்.

மாத்தளை
கலைவிஜி

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக