மணப்பெண்ணை அலங்கரிப்பதற்காக வருகை தந்திருந்த தோழியர் அடிக்கடிவிடும் பகிடிகளுக்கு ஆயிஷாவால் மனம் விட்டு சிரிக்க முடியவில்லை. வளர்ப்புத்தாய் நஜீமா அப்பக்கம் அடிக்கொரு தரம் வந்து மணப்பெண்ணுக்குத் தேவையானவற்றையும் குறை நிறைகளைக் கவனித்து விட்டுச் சென்றாள். அப்போது மட்டும் வலியவே முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள் மணப்பெண் ஆயிஷா.
நஜீமா அவளைத்தான் பெற்ற மகளாகவே கருதினாள். அவர்கள் வீட்டில் இதுதான் முதல் திருமண வைபவம் நஜீமா மகிழ்ச்சியில் திளைத்தாள். ஆயிஷாவுக்குத் தேவையான ஆடை ஆபரணங்களை ஆயிஷா விரும்பிய வடிவங்களிலே வாங்கிக் கொடுத்தாள்.
ஆயிஷாவோ தனக்குத் திருமணம் பேசப்படுவதாகக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியடைந்தாள். எனக்குத் திருமணமா இப்போதுதானே எனக்கு இருப்பத்திரெண்டு வயது. என்னை விட மூத்த சகோதரிகள் இருவர் இருக்கின்றனரே. அவர்கள் இன்னும் உயிரோடு இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு இன்னும் திருமணம் நடந்திருக்காது என தனக்குள் அங்கலாய்க்கலானாள்.
ஆமாம் அவளின் பிறந்தகமான கிழக்கிலங்கையில் இள வயது திருமணம் என்பது நடக்க முடியாத ஒன்று. அத்திபூத்தால் போல எப்பவாவது நடக்கும். மாப்பிள்ளைக்குக் கொடுக்க லட்சம் லட்சம் பணம் வேண்டுமே. வீடு, வாசல், நகை, நட்டு வாகன வசதியென்று குறையில்லாமல் சீதனம் கொடுத்தாக வேண்டுமே.
குடும்பத்தில் பெண் மக்கள் பிறந்துவிட் டால் அந்தப் பெற்றவர் முகம் கறுத்துவிடு மாம். பிறந்த தினத்திலிருந்து பணம் சேர்த் தால்தான் மூன்று தசாப்தத்தின் பின்னராவது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடிகின்றது. இரண்டு மூன்று பெண்கள் பிறந்துவிட்டால் கேட்கவும் வேண்டுமா? தகப்பன் தீராத கடனாளியாகி விடுகின்றான். தாயோ தீராத நோயாளியாகி விடுகின்றாள்.
ஆயிஷாவுக்கு இங்கு நடக்கும் திருமணங்களைக்காண ஆச்சரியமாக இருந்தது. அவள் இந்த வீட்டுக்கு வந்து ஒரு சில வருடங்களில் பக்கத்து பக்கத்து வீடுகளிலுள்ள இளம் பெண்கள் எவ்வளவோ பேருக்கு திருமணம் சுமுகமாக நடந்து விட்டது. சாதாரண குடும்பங்களில் கூட ஒரே வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன.
ஆயிஷாவைப் பெண்கேட்டு வந்தவர்கள் கூட பெண்வீட்டாரிடம் இருந்து சீதனமாக எதையுமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் அவர்கள் எதிர்பார்த்தனர். மணமகள் கணவன் வீட்டில் தான் தங்க வேண்டுமென்று மட்டும் கேட்டுக் கொண்டனர். புகுந்த வீடுதானே பெண்ணுக்குச் சொந்த இடம். நஜீமாவும் அப்படிப் போனவள்தானே.
எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்று நஜீமா ஆயிஷாவை மனமார வாழ்த்திக் கொண்டாள். ஆயிஷா பெற்றவரைப் பிரிந்து இரண்டு வருடத்தில் வளர்ப்புப் பெற்றோரையும் பிரியப் போகின்றாள். நஜீமாவின் கண்கள் பனித்தன. அந்த விழிகளினூடாக ஆயிஷாவின் இறந்த காலம் நிழலாடியது.
அன்று சுனாமி வந்து மறுதினம் நஜீமா தன் ஒரே மகனான சிறுவன் நkரை அழை த்துக்கொண்டு கணவனுடன் அகதிகளுக்கான நிவாரணப் பொருட்களை விநியோகித்து விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தாள்.
மகன் பசியென்று சொல்லவே ஒரு ஓரமாக காரை நிறுத்தி உண்ணத் தொடங்கினர். பசி வயிற்றைக் கிள்ளிய போதிலும் உண்ண முடியவில்லை அவர்களுக்கு. அவர்கள் சற்று முன் கண்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் பரிதாபக் காட்சிகள் கண்முன்னே தோன்றித் தோன்றி மறைந்தன.
ஏ.ஆர். kனத் ரஹ்மா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக