அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

மனித நேயம்

நாமிஸ் ஒரு புத்தகப் பிரியன். எந்தப்புத்தகத்தை எடுத்தாலும் அதனை வாசிப்பதில் ஒரு தனி இன்பம் அவனுக்கு. சிறிது தொலைவிலுள்ள தன் நண்பன் பாரிஸை ஒரு தினம் சந்திக்கச் சென்றான் நாமிஸ். அவனோ பக்கத்து வீட்டு சறூக்கின் வீட்டுக்குச் சென்றதாகச் சொல்லவும் நாமிஸ¤ம் அங்கே சென்றான்.

அங்கே புத்தக அலுமாரியொன்றைக் கண்டதும் நாமிஸ் வாயடைத்துப் போனான். அங்கே அவ்வளவு நல்ல நல்ல புத்தகங்கள் இருக்குமென்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. தாங்க முடியாத ஆசையினால் இந்தப் புத்தகங்களில் இரண்டு மூன்றைத் தந்துதவினால் படித்துவிட்டுத் தந்து விடுவேன் ச்சா... எவ்வளவு நல்ல புத்தகங்கள் என்றான் நாமிஸ்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட சறூக் தயவு செய்து கோபிக்கக் கூடாது. உங்களுக்கு எவ்வளவு நேரமெடுத்து என் அறையிலிருந்து தேவையான விருப்பமான புத்தகங்களைப் படிக்க முடியுமோ படித்துக் கொள்ளுங்கள், ஆனால் புத்தகங்களை என் வீட்டைவிட்டு வெளியே விடுவதில்லை என்று ஒரு கட்டுப்பாட்டை எற்படுத்தியிருக்கின்றேன் என்றான் சறூக்.

நாமிஸ் தான் தேடிவந்த நண்பன் பாரீஸை சந்தித்து பேசிவிட்டு பெரும் வேதனையுடன் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அந்தப் புத்தக அலுமாரி தனக்குள் சுழன்று கொண்டே இருந்தது. சறூக்கைப் போன்று நல்ல நல்ல புத்தகங்களை வாங்கிப் பிடித்து மகிழ்ந்து சேமிக்க எண்ணமிருந்தும் அதற்கான வழிதான் அவனிடம் இல்லாமல் இருந்தது.

நாமிஸ் சறூக்கின் புத்தகங்களைப் பார்த்து விட்டு வந்து சில வாரங்கள் சென்றன. ஒரு நாள் பாரிஸ¤டன் சறூக்கும் தன் வீட்டிற்கு வருகை தந்தார்கள். இருவரையும் அன்போடு வரவேற்று வந்த விடயத்தைக் கேட்டான் நாமிஸ்.

இவர் எனது பக்கத்து வீட்டு நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு மிகவும் வேண்டியவர். இவரின் வீட்டிற்கு இன்று நான்கைந்து குடும்பத்தினர் திடீரென, வருவதாக அறிவித்துள்ளார்களாம். உணவு சமைப்பதற்காகப் பெரிய அண்டாக்கள் தேவையென்று என்னிடம் வந்தார். ஆனால் அந்தளவு அண்டாக்கள் எங்கள் வீட்டில் இல்லை. இங்கே உங்கள் வீட்டில் இவைகள் இருப்பது எனக்குத் தெரியும். அதனால்தான் வாங்கிக் கொடுக்கலாம் என்று அழைத்து வந்தேன் என்றான் பாரிஸ்.

ஏராளமான புத்தகங்களை வைத்துக் கொண்டி ருந்தவரிடம் இரவல் கேட்ட என்னை அங் கேயே இருந்து எவ்வளவு நேரமானாலும் படித் துவிட்டுப் போகலாம் என்று சொன்னவர் இன்று என்னிடமே அண்டாக்கள் இரவல் கேட்டு வந்துள்ளாரே இவருக்குத் தகுந்த பதிலடி கொடுக்க எண்ணிய போது வள்ளுவரின்

‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்’ என்ற வாக்கு நாமிஸின் எண்ணத்திற்கு தடைசெய்தது. நமக்குத் துன்பம் சென்தவனைத் தண்டிக்க வேண்டுமானால் அவர் வெட்கப்படும் படியான நன்மையை செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு ஏற்பட்டது.

இந்த அண்டாக்களை உங்களுக்குத் தந்துதவுவதில் எனக்கோ எங்கள் வீட்டாருக்கோ எந்தவித ஆட்சேபனையுமில்லை. ஆனால் ஒரு கட்டுப்பாடு இந்த அண்டாக்களை வெளியே கொண்டு செல்லாவண்ணம் வேண்டிய மாதிரி இங்கேயே சமைத்து எதுவும் செய்யலாம் என்று நிச்சயமாக நாங்கள் சொல்லமாட்டோம். இவைகளைத் தாராளமாக எடுத்துச் செல்லலாம் வீட்டில் சும்மா தேங்கிக் கிடப்பதை தேவைப்ப ட்டோருக்குக் கொடுத்துதவுவதுதான் மனித நேயம் என்றான் மலர்ந்த முகத்துடன் நாமிஸ்.

நாமிஸின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மனம் நெகிழ்ந்தவனாக சறூக் இப்படிப்பட்ட மனித நேயம் உள்ளவருக்கு மனம் நோக நடந்து விட்டேனே என மனவருந்தியவனாக அண்டாக்களைக் கொண்டு போகும் முயற்சியில் இறங்கினான்.

கிண்ணியா
எம்.எம். அலி அக்பர்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக