அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

போலிகள்

மாரியம்மன் கோவில் கதவு திறந்து, சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கோவிலடியில் அடிக்கும் பறைமேளச் சத்தம் அந்தக் கிராம மெல்லாம் ‘தொம்’ மென்று கேட்டது.

கனகம்மா சாமியறைக்குள் நின்றபடியே கைகளைத் தலைக்குமேல் குவித்து, “அம்மாளே, வேலையை இழந்து நிற்கும் என் கணவனுக்கு இந்த வருசத்திலேயே பழையபடி வேலைகிடைக்கச் செய்தாயே! அதுமட்டுமல்ல என்பையன் கனடாவுக்கப் போக வழிகாட்டம்மா” என்று கண்ணீர் மல்கக் கத்திக் கதறினாள். அவ்வளவுதான் தெரியும் தெருவாசல் பக்கம் நின்று யாரோ அவளைக் கூப்பிட்ட சத்தம் கேட்டது. மெதுவாக வந்து யன்னலின் ஊடாகப் பார்த்தாள். கோவில் சடங்குக் காசு கேட்டு சடங்குக்காரர்கள் அங்கே வந்து நிற்பது தெரிந்தது.

“இவனுகளுக்கு இதைவிட்டால் வேறுவேலையே கிடையாது. மனிசர் கிடக்கிற கிடைக்குள்ள அம்மன் சடங்கு ஒன்றுதான் முக்கியம்” என்று புறுபுறுத்தபடி மெதுவாக வீட்டுக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு பேசாமல் நின்று கொண்டாள். காசு கேட்டு வந்தவர்கள் தொண்டை கிழியக் கத்திவிட்டுத் திருப்பிப் போனார்கள்.

செ. குணரத்தினம்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக